தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற வழிதேடும் மகள்கள்

திருப்பத்தூர்: “அப்பாவுக்கு நாங்கள்தான் உயிர். அவரது கடைசி மூச்சு நிற்கும்போதுகூட எங்களது படிப்பை நினைத்துத்தான் அவர் கண்கலங்கினார். அவரது ஆசையை நிறைவேற்ற நாங்களும் நடையாக நடக்கிறோம். ஆனால் வழிதான் இன்னும் ஒன்றும் பிறக்கா மல் உள்ளது,” என்று தமிழக மாணவி மெளனிகா வேதனை தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, கிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார். இவரது மனைவி அனு ராதா. இவர்களுக்கு சிந்து, மௌனிகா என இரு மகள்கள்.

ஆரம்பத்தில் பெட்ரோல் நிலை யத்தில் மேலாளராகப் பணிபுரிந்த தினேஷ்குமாரின் மூத்த மகள் சீனாவில் நான்காம் ஆண்டு மருத்துவப் படிப்பை படித்து வரு கிறார். அடுத்த மகள் மௌனிகா, பி.சி.ஏ. முடித்திருக்கிறார்.

இந்நிலையில், தனது வேலையை விட்டு விலகிய தினேஷ்குமார், ஹோட்டல் ஒன்றை நடத்தினார்.

அந்தத் தொழிலில் ஏகப்பட்ட நஷ்டம். கல்லீரல் பிரச்சினையும் கூடவே சேர்ந்துகொள்ள அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப் பட்டு படுத்த படுக்கையானார்.

கல்விக் கட்டணத்தைச் செலுத்தமுடியாமல் சீனாவில் மகள் படும் சிரமத்தை நினைத்து கலங்கிய தினேஷ்குமார், கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி திடீரென மரணமடைந்தார்.

கொரோனா ஊரடங்கு காரண மாக சீனாவிலிருந்து மூத்த மக ளால் ஊர் திரும்ப முடியவில்லை. காெணாளி மூலமாக தந்தையின் முகத்தைப் பார்த்துக் கதறினார்.

இந்நிலையில், மகள்களின் படிப்புக்கு உதவி செய்யுமாறு மீண்டும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளை அணுகியிருக்கிறார் அனுராதா.

அவரது கோரிக்கை மனுக்க ளுக்கு எல்லாம் இன்னும் ஒரு வழியும் பிறக்காமல் கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!