தனது சேமிப்பு முழுவதையும் பயன்படுத்தி தனக்கென சிலை நிறுவிய குப்பை சேகரிப்பவர்

சேலம்: தமி­ழ­கத்­தின் சேலம் மாவட்­டத்­தில் குப்பை அள்­ளும் தொழி­லைச் செய்து வரும் நல்ல தம்பி என்­ப­வர், தனது நிலத்­தில் தனது சேமிப்பு முழு­வ­தை­யும் பயன்­ப­டுத்தி தனது முழு உரு­வச் சிலையை வடித்­துள்­ளார்.

பல­ரும் வந்து பார்த்­துச் செல்­லும் இந்­தச் சிலையை மிக­வும் பிரம் மாண்­ட­மான முறை­யில் திறப்­ப­தற்கு நல்­ல­தம்பி திட்­ட­மிட்­டுள்­ளார். அண்­மை­யில் நிலம் ஒன்றை வாங்­கி­ய­வர், அதில் தனது சொந்த சிலையை உரு­வாக்க ரூ. 10 லட்­சத்தை செல­வ­ழித்­துள்­ளார்.

சேலம் மாவட்­டம், அத்­த­னூர்­பட்டி கிரா­மத்­தைச் சேர்ந்த ஏ.நல்­ல­தம்பி, தெரு­வில் வீசப்­படும் பாட்­டில்­களை எடுத்து, அவற்றை விற்று அதில் கிடைக்­கும் பணத்­தில் தனது வாழ்க்­கையை நடத்தி வரு­கி­றார்.

“நான் சிறு­வ­யது முதலே எனக்கென ஒரு சிலை வைக்க விரும்பினேன். இப்­போது என் கனவு நனவாகி­யுள்­ளது,” என்­றார்.

இதற்கு முன்­னர் கொத்­த­னார் பணி­யில் ஈடு­பட்டு வந்த நல்­ல­தம்பியால், அந்த வேலை­யைத் தொட­ர­மு­டி­யா­மல் குப்பை அள்­ளும் தொழி­லில் இறங்கினார். தற்­போது பிளாஸ்­டிக் பாட்­டில்­கள், மறு­சு­ழற்சி செய்­யும் பொருட்­க­ளைச் சேக­ரித்து ரூ.200 முதல் ரூ.300 வரை சம்­பா­திக்­கி­றார்.

20 ஆண்­டு­க­ளுக்கு முன்பு தனது குடும்­பத்­துட­னான அனைத்து உற­வு­க­ளை­யும் முறித்­துக்கொண்ட நல்­ல­தம்பி, தனது செல்­வத்தை யாரு­க்கும் கொடுக்காமல் தனக்­குத் தானே சிலை அமைத்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!