பாராட்டிய பிரதமர் மோடியிடம் ரூ.3,000 கோடி நிதி கோரிய தமிழக முதல்வர்

சென்னை: கொரோனா தடுப்பு நட­வ­டிக்­கை­களைத் திறம்­பட மேற்­கொள்ள தமி­ழ­கத்­திற்கு ரூ.3,000 கோடி நிதியை உட­ன­டி­யாக வழங்­க­வேண்­டும் என பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

கொரோனா கிரு­மித்­தொற்­றின் தாக்­கத்­தால் அதி­கம் பாதிக்­கப் பட்­டுள்ள தமி­ழ­கம் உட்­பட ஏழு மாநில முதல்­வர்­க­ளு­டன் பிர­த­மர் மோடி காணொ­ளிக் காட்சி வழி கலந்­து­ரை­யா­டி­னார்.

அப்போது, ஊர­டங்­கின் கார­ண­மாக முடங்­கிய பொரு­ளா­தா­ரத்தை மீட்க தளர்­வு­களை அதி­கப்­ப­டுத்­தும்­ப­டி­ மாநில முதல்­வர்­களை மோடி வலி­யு­றுத்­தி­னார்.

ெதாடர்ந்து பேசியவர், “கொரோனா கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் தமி­ழக அர­சின் பங்கு பாராட்­டிற்­கு­ரி­யது. இதன் மூலம், நாட்­டி­லுள்ள பிற மாநி­லங் களுக்­கு தமிழ்­நாடு ஓர் எடுத்­துக் காட்­டாக விளங்கி வரு­கிறது,” என்று கூறி­னார்.

தலை­மைச் செய­ல­கத்­தில் இருந்­த­படி இந்த ஆலோ­ச­னை­யில் பங்­கேற்ற முதல்­வர் பழ­னி­சாமி, பிர­த­மர் மோடி­யி­டம் பல்­வேறு கோரிக்­கை­களையும் முன்­வைத்­தார்.

அதன்­படி, கொரோனா தடுப்­புப் பணிக்­காக மேலும் ரூ.3,000 கோடி உட­ன­டி­யா­கத் தேவை என்று கூறி­ய­வர், “ஜிஎஸ்டி வரு­வாய் குறைந்த கார­ணத்­தி­னால் மத்­திய அரசு தமி­ழ­கத்­திற்கு சிறப்பு நிதி­யாக ரூ.9,000 கோடி ஒதுக்­க­வேண்­டும்.

“கொரோனா முறி­ய­டிப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள அதி­கம் செல­வி­டப்­ப­டு­கிறது. நிதி நெருக்­க­டி­யான கால­கட்­டத்­தில் தொடர்ந்து இவ்­வ­ளவு தொகையைத் தமிழக அரசால் செல­விட முடி­யாது என்­ப­தால் கொரோனா தடுப்­புப் பணிக்­காக தமி­ழ­கத்­திற்கு மேலும் ரூ.3,000 கோடியை உட­ன­டி­யாக வழங்க வேண்­டும்.

“அத்துடன், ரூ. 1,000 கோடியை மாநில பேரி­டர் நிவா­ரண நிதிக்கு உட­ன­டி­யாக விடு­விக்­க­வேண்­டும்,” என்று முதல்­வர் கோரினார்.

தமி­ழக அரசு எடுத்து வரும் நட­வ­டிக்கைகள் கார­ண­மாக கொரோனா இறப்பு விகி­தம் 1.62% ஆக உள்­ளது எனக் குறிப்­பிட்டவர், கொரோனா பரி­சோ­த­னைக்கு தின­மும் 6 கோடியே 80 லட்­சம் ரூபாய் செல­வா­கும் நிலை­யில், இதில் சரி­பா­தியை மத்­திய அரசு வழங்க வேண்­டும் எனவும் வலியுறுத்தினார்.

நாட்­டில் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்ட 63% மக்கள் மகா­ராஷ்­டி­ரம், தமி­ழ­கம், ஆந்­தி­ரப்பிர­தே­சம், கர்­நா­டகா, உத்­த­ரப்பிர­தே­சம், டெல்லி, பஞ்­சாப் ஆகிய ஏழு மாநி­லங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அ​க்டோ­பர் 1 ஆம் தேதி முதல் தமி­ழ­கம் முழு­வ­தும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்­டம் அமல்ப­டுத்­தப்­பட உள்­ளது. இத்­திட்­டத்தை செயல்­ப­டுத்­து­வது தொடர்­பாக அமைச்­சர்­கள், அதி­கா­ரி­க­ளு­டன் முதல்வர் ­ஆலோ­னை தொடங்கி உள்­ளார்.

கொரோனா தடுப்புப் பணிகளுக்கான மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.3,000 கோடி நிதியை மத்திய அரசு அளிக்கவேண்டும். தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,000 கோடியை மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு உடனடியாகத் தரவேண்டும்.

தமிழக முதல்வர் பழனிசாமி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!