வாளாடியில் 'யானை குத்தி பட்டான் நடுகல்' கண்டெடுப்பு

வாளாடியில் 'யானை குத்தி பட்டான் நடுகல்' கண்டெடுப்பு

1 mins read
6c25fe86-d521-47ce-887f-d38e72dbd49c
-

திருச்சி: திருச்சி மாவட்­டம், லால்­குடி அருகே உள்ள வாளாடியில் நடு­கல் ஒன்று கண்­டெ­டுக்­கப்பட்­டுள்­ளது. 'யானை குத்தி பட்­டான் நடு­கல்' (படம்) என சொல்­லப்­படும் இக்­கல்­லின் நடு­வில் திரி­சூ­ல­மும் இட­து­பு­றம் மனித உரு­வ­மும் வல­து­பு­றம் யானை­யின் உரு­வ­மும் வடிக்­கப்­பட்­டுள்­ளது. சற்று சிதிலமடைந்து காணப்­படும் இந்த நடு­கல் கி.பி. 12ஆம் நூற்­றாண்­டைச் சார்ந்­த­தாக இருக்­க­லாம் என்று திருச்சி ஜோசப் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த பேரா­சி­ரி­யர் ஆரோக்­கிய தன­ராஜ் கூறி­யுள்­ளார்.

'யானை குத்தி பட்­டான் நடு­கல்' என்­பது ஊருக்­குள் நுழை­யும் யானையை வீரன் ஒரு­வன் கொன்­றாலோ அல்­லது வீரனை யானை கொன்­றாலோ அந்­தச் சம்பவத்­தின் நினை­வாக வைக்­கப்­படும் கல்­லா­கும். தற்­போது வாளா­டி­யில் கண்­டெ­டுக்­கப்­பட்ட கல்­லும் இதையே நினை­வு­ப­டுத்­து­வ­தால் தொல்­லி­யல் துறை ஆய்­வா­ளர்­கள் இது­கு­றித்து ஆய்­வு­களை மேற்­கொள்ள வேண்­டும் என கோரி­யுள்­ளார் ஆரோக்­கிய தன­ராஜ்.