மீனாட்சி அம்மன் கோவிலில் 410 கல்வெட்டுகள்

மதுரை: தமி­ழ­கத்­தில் உள்ள புகழ்­பெற்ற ஆல­யங்­க­ளுள் மதுரை மீனாட்சி அம்­மன் கோயி­லும் ஒன்­றா­கும். இந்த ஆல­யத்­தில் 1,000 ஆண்­டு­கால வர­லாற்­றைத் தெரி­விக்­கும் வகை­யி­லான 410 கல்­வெட்­டு­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தமி­ழக தொல்­லி­யல் துறை முன்­னாள் உதவி இயக்­கு­நர் சாந்­த­லிங்­கம் தெரி­வித்­துள்­ளார்.

திரு சாந்­த­லிங்­கம் தலை­மை­யிலான குழு­வி­னர் கடந்த ஓராண்­டாக இந்த அம்­மன் கோவி­லில் உள்ள அனைத்து கல்­வெட்­டு­க­ளை­யும் ஆய்வு செய்து வந்­த­னர். அதனை ஒரு புத்­த­க­மா­கத் தொகுத்­துள்ள திரு சாந்­த­லிங்­கம், இப்­புத்­த­கம் விரை­வில் வெளி­யி­டப்­படும் என்­றார். ஆய்வு குறித்து திரு சாந்­த­லிங்­கம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறு­கை­யில், “மீனாட்சி அம்­மன் கோவி­லில் கிடைத்­துள்ள 410 கல்­வெட்­டு­கள் பற்றி நூலா­கத் தொகுக்­கப்­பட்­டுள்­ளது. அதில் 79 கல்­வெட்­டு­கள் முழு­மை­யாக உள்­ளன. மீத­முள்ள 301 கல்­வெட்­டு­கள் கி.பி.13ஆம் நூற்­றாண்­டைச் சேர்ந்த பிற்­கால பாண்­டி­யர் காலத்து துண்­டுக் கல்­வெட்­டு­க­ளாக உள்­ளன.

“இவை அனைத்­தும் தமிழ் கல்­வெட்­டு­க­ளா­க­வும் அதில் ஒன்று சமஸ்­கி­ருத மொழி­யில் கிரந்த எழுத்­தில் எழு­தப்­பட்ட கல்­வெட்­டா­க­வும் உள்­ளன. இது­த­விர, கம்­பத்­தடி மண்­ட­பம் கட்­டப்­பட்ட செய்தி பற்­றிய கல்­வெட்டு மட்­டும் தெலுங்­கி­லும் தமி­ழி­லும் எழு­தப்­பட்­டுள்­ளது.

“அனைத்துக் கல்­வெட்­டு­களும் சுவாமி சன்­னதி பிர­கா­ரம், கோபு­ரங்­கள், மண்­ட­பங்­களில் காணப்­படு­கின்­றன. முத­லாம் சடை­ய­வர்­மன் குல­சே­கர பாண்­டி­யன் (கி.பி.1190-1216) கால கல்­வெட்­டு­தான் கோவி­லின் முத­லா­வது கல்­வெட்டு.

“அதைத்­தொ­டர்ந்து வந்த பாண்­டிய மன்­னர், விஜ­ய­ந­கர அர­சர் கிருஷ்ண தேவ­ரா­யர், மல்­லி­கார்ச்­சு­னர், திம்­ம­ரா­யர் கல்­வெட்­டு­களும் நாயக்­கர் காலத்­தில் வீரப்ப நாயக்­கர், திரு­ம­லை­நா­யக்­கர், விச­ய­ரங்­க­சொக்­க­நா­தர் ஆகி­யோ­ரின் கல்­வெட்­டு­களும் உள்­ளன.

“சங்­க­கா­லத்­தில் இக்­கோ­வில் மிக எளி­மை­யாக செங்­கல் உள்­ளிட்ட பொருட்­க­ளால் சிறி­ய­தாக கட்­டப்­பட்­டி­ருக்க வேண்­டும்.

“அதன்­பின்பு கி.பி.13ஆம் நூற்­றாண்­டில்­தான் கோவில் கல் கட்­ட­ட­மாக கட்­டப்­பட்­ட­தும் பாண்­டிய மன்­னர்­கள் அதற்கு உத­வி­ய­தும் தெரி­ய­வ­ரு­கிறது. எனவே, பாண்­டிய மன்­னர்­கள் கோவில் கட்­டி­ய­தும் திரு­வி­ழாக்­கள் நடத்­தி­ய­தற்­காக நிலங்­கள் கொடுக்­கப்­பட்­ட­தற்­கான முழு­மை­யான விவ­ரங்­கள் இந்­தக் கல்­வெட்­டில் உள்­ளன.

“கோவில் உரு­வா­னது முதல் சுவா­மி­யின் பெயர் திரு ஆல­வாய் உடைய நாய­னார், நம்பி சொக்­கர் என்ற பெய­ரில் அழைக்­கப்­பட்­டது.

“மீனாட்சி சுந்­த­ரே­சு­வ­ரர் பெயர் 1898ஆம் ஆண்­டிற்­குப் பின்­னர்­தான் வந்­துள்­ளது. ஏறக்­கு­றைய 1,000 ஆண்­டு­கள் தாண்­டிய கல்­வெட்­டு­கள் மதுரை மீனாட்சி அம்­மன் கோவி­லில் உள்­ளன,” என்று தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!