கருத்துக்கணிப்பு: அடுத்த தமிழக முதல்வராக இபிஎஸ்ஸை முந்திய ஓபிஎஸ்

சென்னை: தமி­ழ­கத்­தின் அடுத்த முதல்­வ­ராக முதல்­வர் பழ­னி­சாமியை விட­வும் துணை முதல்­வர் ஓ.பன்­னீர்­செல்­வத்தை சற்று கூடு­த­லான மக்­கள் விரும்புவதாக தெரி­வித்­துள்­ள­னர். அதேேபால் மறைந்த முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் நம்­பிக்­கைக்கு உரி­ய­ மனித­ரா­க­வும் ஓ.பன்­னீர்­செல் வத்தை அதி­க­மா­னோர் குறிப்­பிட்­டுள்­ள­னர். இவ்விவ­ரங்­கள் ஓர் ஆய்வு வழி தெரியவந்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில் 16வது சட்­ட­மன்­றத் தேர்­தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடை­பெ­றும் என எதிர்­பார்க்­கப்­படும் நிலை­யில், அதற்­கான ஆயத்­தப் பணி­களில் அர­சி­யல் கட்­சி­கள் பல­வும் இறங்கி உள்­ளன. இத­னால், இப்ேபாது சூடு­பி­டிக்­கத் துவங்கியுள்ள தேர்­தல் களத்­தில் ஆளுங்­கட்சி, எதிர்க்­கட்­சிக்கு இடை­யே­தான் போட்டி நிலவுகிறது.

இந்­நி­லை­யில், எதிர்­வ­ரும் சட்ட மன்­றத் தேர்­தலை முன்­னிட்டு மண் ஃபவுண்­டே­சன் எனும் அறக்­கட்­ட­ளை­யும் சில தன்­னார்வ அமைப்­பு­களும் இணைந்து தமி­ழ­கத்­தின் 38 மாவட்­டங்­க­ளி­லும் கருத்­துக்­கணிப்­பு­களை நடத்­தி­யுள்­ளன.இதில், பொது­மக்­கள், தொழி­லாளர்கள், மாணவர்கள் என ஏழு லட்­சம் பேர் கலந்து­கொண்டனர்.

தமி­ழ­கத்­தில் உள்ள 234 தொகு­தி­க­ளி­லும் ஒரு தொகு­திக்கு 3,000 பேர் என்ற எண்­ணிக்­கை­யில் மொத்­தம் 702,000 பேரி­டம் கருத்­துக்­கணிப்­பு­கள் நடத்­தப்­பட்­டன. அதன்­படி, அடுத்து ஆட்­சியை பிடிக்­கப்­போ­வது எந்தக் கட்சி என்ற கேள்­விக்கு அதி­முக-50.2%, திமுக-35.6%, பிற கட்­சி­கள்-14.2% என­மக்­கள் பதில் அளித்­துள்­ள­னர்.

தமி­ழ­கத்­தின் அடுத்த முதல்­வராக யாரை விரும்­பு­கி­றீர்­கள் என்ற கேள்­விக்கு ஓபி­எஸ்-28.7%, இபிஎஸ்-27.9%, மு.க.ஸ்டா­லின்-26.6%, ரஜினி-6.9%, அன்­பு­மணி-6.2%, கமல்-3.7% பேரும் தேர்வு செய்­துள்­ள­னர்.அதி­மு­க­விற்குப் பக்கபல­மாக இருப்­பது இரட்டை இலைச் சின்­னம்-76.5%, ஜெய­ல­லி­தா­வின் செல்­வாக்கு-23.5% பேர் கூறி­யுள்­ள­னர். அதே­போல், அதி­மு­க­வின் பல­வீ­ன­மாக இரட்­டைத் தலைமை என 65.4%, ஆளு­மை­யற்ற தன்மை என 34.6% பேரும் தெரி­வித்­துள்­ள­னர்.

ஜெய­ல­லி­தா­வின் நம்­பிக்­கைக்கு உரி­ய­வ­ராக ஓபி­எஸ் இருப்­ப­தாக 74.7% பேரும் இபி­எஸ் என 25.3% பேரும் கூறி­யுள்­ள­னர். அதி­மு­கவை பலப்­ப­டுத்த செய்ய வேண்­டிய மாற்­றம் குறித்து குறிப்­பி­டு­கை­யில், ஒற்­றைத்­த­லைமை -75.4%, சசி­கலா தலைமை- 19.3%, சசி­கலா-டிடிவி இணைப்பு என 5.3% பேரும் பதிவு செய்­த­னர். அதி­மு­க­வின் ஆட்சி நன்­றாக உள்­ள­தாக 21.7%, பர­வா­யில்லை என 49.4%, மோசம் என 28.9% பேரும் தெரி­வித்­துள்­ள­னர்.

திமு­க­வின் பலமாக உத­ய­சூரி­யன் சின்­னத்­துக்கு 78.6%, கட்­சி­யின் கட்­டுக்­கோப்­பு­தான் கார­ணம் என 21.4%, பல­வீ­னத்­துக்கு கரு­ணா­நிதி இல்­லாதே கார­ணம் என 66.2%, தலைமை சரி­யில்லை என 33.8% பேரும் வாக்­களித்­த­னர். மு.க.ஸ்டா­லின் முதல்­வ­ராகத் தகு­தி­யா­ன­வர் என 41.6% பேரும் அவ­ரி­டம் கரு­ணா­நி­தி­யின் ஆளுமை அறவே இல்லை என 42.8% பேரும் கட்சி பல­மி­ழப்பதாக 13.4% பேரும் தெரிவித்துள்ளனர்.

ரஜினி, கமல் அர­சி­யல் நுழைவு அர­சி­ய­லில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­துமா? என்ற கேள்­விக்கு மாற்­றம் நிச்­ச­யம் வரும் என 13.1%, மாற்­றத்­திற்கு வாய்ப்­பில்லை என 59.5%, வரு­கையே தேவை­யற்­றது என 27.4% பேரும் தங்கள் எண் ணங்களைப் பதிவு செய்துள்ளனர். அதிமுக கட்சியின் இரட்டை இலைச் சின்னத்துடன் தமிழக முதல்வர் பழனிசாமி (இடது), துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். படம்: தமிழக ஊடகம்

தமி­ழ­கத்­தில் ஒரு தொகு­திக்கு 3,000 பேரிடம் நடு­நி­லை­யோடு கருத்து கேட்கப்பட்டது இதுவே முதல்­முறை. இதன்மூலம் மக்­க­ளின் தெளி­வான மன­நி­லை­யை வெளிக்­கொ­ணர வேண்­டும் என்­பதே இலக்கு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!