'விஜயகாந்த் நாளை வீடு திரும்புவார்'

'விஜயகாந்த் நாளை வீடு திரும்புவார்'

1 mins read
a3d32e05-2bae-4e0f-9ffd-132e0ae981fc
-

கொவிட்-19 பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும் நாளை வீடு திரும்புவதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.இம்மாதம் 22-ஆம் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திரு விஜயகாந்த் சிகிச்சை முடிந்து நாளை வீடு திரும்புவார் என்று தேமுதிக துணைச் செயலாளர் சுதிஷ் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்தின் நண்பர்களும் சகாக்களும், அவர் விரைவாக குணமடைய வேண்டும் என சமூக ஊடகங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சரத்குமாரைத் தொடர்ந்து நடிகர் ராதரவி விஜயகாந்த் விரைவாக குணமடைய வாழ்த்தியுள்ளார்.