கீழடியில் 25 அடுக்குகள் கொண்ட உறைகிணறு

மதுரை: கீழடி அக­ழாய்­வின் நட­வ­டிக்­கை­யின் அண்­மைய கண்­டு­பி­டிப்­பான 25 அடுக்­கு­க­ளைக் கொண்ட உறை­கி­ணறு (படம்)அனை­வ­ரை­யும் வியப்­பில் ஆழ்த்­தி­யுள்­ளது. இந்த உறை­கி­ண­றா­னது சுமார் 80 செ.மீ. விட்­ட­மும் 380 செ.மீ உய­ர­மும் கொண்­ட­தா­க­வும் உள்­ளது.

தமி­ழ­கத்­தின் கீழடி பகு­தி­யில் நீடித்து வரும் அக­ழாய்வு நட­வ­டிக்­கை­யின் போது தமி­ழர்­க­ளின் தொன்­மை­யைப் பறை­சாற்­றும் வகை­யில் ஏரா­ள­மான பொருள்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

குறிப்­பாக ஆறாம் கட்ட அக­ழாய்­வில் மட்­டும் பத்­துக்­கும் மேற்­பட்ட உறை­கி­ண­று­கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன என்­றும் தற்­போது கண்­டு­பி­டிக்­கப்­பட்ட உறை­கி­ண­று­தான் மிகப்­பெ­ரி­யது என்­றும் நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். இந்த உறை­கி­ணறு அக­ரம் பகு­தி­யில் கிடைத்­துள்­ளது.

தற்­போது கீழடி தவிர கொந்­தகை, மண­லூர், அக­ரம் என நான்கு இடங்­களில் நடை­பெற்று வரும் அக­ழாய்­வின்­போது மேலும் பல பொருள்­கள் கிடைக்க அதிக வாய்ப்­புள்­ள­தாக நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

எனவே கீழ­டி­யில் அருங்­காட்­சி­யம் அமைக்­கப்­ப­டு­வது வர­வேற்­கத்­தக்க நட­வ­டிக்­கை­ என்­றும் இப்­போது நடை­பெற்று வரும் ஆறாம் கட்ட ஆய்­வுக்கு அரசு உரிய நிதியை ஒதுக்கி, இப்­பணி மேலும் சில மாதங்­கள் நீடிக்க வழி­வ­குக்க வேண்­டும் என்­றும் பல­ரும் அர­சைக் கேட்­டுக் கொண்­டுள்­ள­னர்.

ஒவ்­வோர் இடத்­தி­லும் சிறப்பு மிக்க தொல்­லி­யல் எச்­சங்­கள் கிடைத்து வரு­கின்­றன. இம்­மாதம் ஆறாம் கட்ட அக­ழாய்­வுப் பணி நிறை­வு­பெ­று­கிறது. இத­னால் தமி­ழக தொல்­லி­யல்­துறை இயக்­கு­நர் சிவா­னந்­தம் தலை­மை­யில் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் பொருள்­க­ளை­யும் ஆவ­ணப்­ப­டுத்­தும் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!