சுடச் சுடச் செய்திகள்

தேர்தலில் தனித்துப் போட்டி: சீமான் திட்டவட்டம்

சென்னை: எந்தக் காலத்­தி­லும் அதி­முக, திமுக, பாஜக, காங்­கி­ரஸ் உள்­ளிட்ட கட்­சி­க­ளு­டன் நாம் தமி­ழர் கட்சி கூட்­டணி அமைக்­காது என அதன் தலைமை ஒருங்­கி­ணைப்­பா­ளர் சீமான் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளார். சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், எதிர்­வ­ரும் சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் நாம் தமி­ழர் கட்சி தனித்­துப் போட்­டி­யி­டும் என்­றார்.

“ஈழப்­போ­ரின் போது அங்கு என்ன நடந்துகொண்­டி­ருக்­கிறது என்­பது வெளியே தெரி­யா­மல் பார்த்­துக் கொள்­ளப்­பட்­டது. போர் தொடர்­பான செய்­தி­கள் மறைக்­கப்­பட்­டன.

“தமி­ழகத்­தில் உள்ள அர­சி­யல் கட்­சி­கள் கூட தேர்­தல் காலத்­தில் ஈழம் ஒரு பிரச்­சினை அல்ல என்று கூறின.

“எமது இனத்தை யார் அழித்­தார்­கள் என்­பது அனை­வ­ருக்­கும் தெரி­யும். அதை வைத்து அர­சி­யல் செய்­கி­றார்­கள்,” என்று சீமான் மேலும் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon