அதிமுக செயற்குழு கூட்டம்: முதல்வர் வேட்பாளர் யார் ஓபிஎஸ், இபிஎஸ் போட்டி

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்வரும் துணை முதல்வரும் வந்தபோது அவர்களது ஆதரவாளர்கள் தனித் தனியே ஆதரவு பதாகைகளை ஏந்தியபடி நின்றுகொண்டிருந்ததால் சற்றே குழப்பம் நிலவியது.

ஒரு­பக்­கத்தில் பழ­னி­சாமி­தான் அடுத்த முதல்­வர் என்றும் மறு பக்கத்தில் ஓ பன்­னீர்­செல்­வம்தான் அடுத்த முதல்­வர் என்றும் அவர் களது ஆதரவாளர்­கள் முழங்­கி­னர். இந்­தப் பர­ப­ரப்­பான சூழ­லுக்கு இடையே நடைெபற்ற செயற்­குழு கூட்­டத்தில் 15 தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன.

இரு மொழிக்­கொள்கை, தமி­ழ­கத்­தில் நீட் தேர்வு நடத்­து­வதைக் கைவிட வேண்­டும், ஜிஎஸ்டி தொகையை வழங்­க­வேண்­டும், கலா­சார ஆய்­வுக் குழு­வில் தமிழ் அறி­ஞர்­க­ளை­யும் சேர்த்­துக்­கொள்ள வேண்­டும், கச்­சத் தீவு மீட்பு, இலங்­கைத் தமி­ழர் பாது­காப்பு உள்­ளிட்ட மத்­திய அர­சுக்கு வேண்­டு­கோள் விடுக்கும் தீர்­மா­னங்­கள் இயற்­றப்­பட்டுள்ளன. அத்­து­டன், கொரோனா தடுப்புப் பணிகள், நிவாரணப் பணிகளுக்குத் தேவையான நிதியைத் தமிழகத் துக்கு மத்­திய அரசு வழங்கவும் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.

அதி­முக நிர்­வா­கி­கள் ஒருமித்த சிந்­த­னை­யோடு ஒன்­றி­ணைந்து செயல்­பட்டு, மீண்­டும் ஆட்சி மலர்ந்­திட உழைப்­போம் என்றும் அறிவுறுத்தப்பட்­டுள்­ளது.

இதற்கிடையே, “2021ல் மீண்­டும் முதல்­வர்-சாமா­னி­யர்­க­ளின் முதல்­வர் இபிஎஸ்,” என்ற வாசகத்துடனான பதா­கை­களை அவரது ஆத­ர­வா­ளர்­கள் ஏந்தி நின்­ற­னர்.

“2021ஆம் ஆண்டில் மீண்­டும் முதல்­வர் எடப்­பா­டியார்தான்,” என்கிற பதா­கையை இபி­எஸ் ஆத­ர­வாளர்­கள் பிடித்­துக்கொண்டு “இபி­எஸ்­தான் மீண்­டும் முதல்­வர்,” என முழக்கமிட்டனர்.

“மும்­முறை முதல்­வரே! அம்­மா­வின் வாரிசே!” என்று ஓபி­எஸ் ஆத­ர­வா­ளர்­கள் முழங்கினர்.

அதிமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த ஓ பன்னீர் செல்வத்துக்கு ஆரத்தி எடுத்து, ஆளுயர மாலை அணிவித்து, பூரண கும்ப மரியாதையுடன் அவரது தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

ஓபிஎஸ் படத்தை முகமூடியாக அணிந்த படி அவரது ஆதர வாளர்கள் அதிமுக தலைமை அலுவலகம் எதிரில் திரண்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!