முதல்வர் வேட்பாளர்; தீவிரமாக செயல்படும் ஓ. பன்னீர்செல்வம்

முதல்வர் வேட்பாளர்; தீவிரமாக செயல்படும் ஓ. பன்னீர்செல்வம்

1 mins read
66dc8ce9-84e9-41bd-a5aa-c3c3938e078c
படம்: ஊடகம் -

தமிழகத்தை ஆளும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் போட்டி நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

தற்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கிறார். இவருக்கு எதிராக தற்போதைய துணை முதல்வரான ஓ. பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தி யிருக்கிறார்.

அடுத்த ஆண்டு தமிழகத் தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில் அக்கட்சியில் முதல்வர் வேட்பாளர் பிரச்சினை சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் தனது கரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளார். கட்சியில் தமக்கு ஆதரவாக இருக்கும் நிர்வாகிகளை தனது இல்லத்துக்கு வரவழைத்து அவர் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

இதில் துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் முதல்வர் பழனி சாமி நடத்தும் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்கும் ஓ. பன்னீர்செல்வம், நேற்று முதல்வருடன் நடைபெற்ற மாவட்ட ஆட்சியாளர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதனால் முதல்வர் வேட்பாளர் விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ள தாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.