தமிழ்ப் பள்ளி மூடல் விவகாரத்தில் பிரதமர் தலையிட கோரிக்கை

குஜ­ராத் மாநி­லம் அக­ம­தா­பாத்­தி­லுள்ள மணி நக­ரில் கடந்த 1971ஆம் ஆண்டு தமிழ் மேல்­நி­லைப்­ பள்ளி தொடங்­கப்­பட்­டு நல்ல நிலையில் இயங்கி வந்தது.

அண்மையில் கொரோனா மற்­றும் மாண­வர்­கள் எண்­ணிக்­கை­யைக் கார­ணம் காட்டி, அந்­தப் பள்­ளியை மூடு­வ­தாக அந்த மாநில அரசு அறி­வித்­தி­ருக்­கிறது.

இந்த முடி­வால் அங்கு வாழ்ந்து­ வ­ரும் தமி­ழர்­களும் தமிழ்­வ­ழி­யில் கல்வி பயின்­று­வ­ரும் மாண­வர்­க­ளின் பெற்­றோ­ரும் கலக்­கத்­தில் இருக்­கி­றார்­கள்.

குஜ­ராத் அர­சின் இந்­தப் போக்­கைக் கண்­டித்து, அங்கு வாழும் தமிழ் மக்­கள் சார்­பில் போராட்­டங்­களும் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.

தற்­போது, பள்­ளிக்­கூ­டம் மூடப்­

ப­டு­வ­தைக் கைவி­டக்­கோரி நீல­கிரி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஆ.ராசா, பிர­த­மர் மோடிக்கு கடி­தம் ஒன்றை அனுப்­பி­யி­ருக்­கி­றார்.

அக்­க­டி­தத்­தில், “குஜ­ராத் அர­சின் இந்த முடிவு, இல­வச மற்­றும் கட்­டாய கல்­விச் சட்ட விதி­மு­றை­களை மீறு­வ­தா­கும். அர­சி­ய­ல­மைப்பு 350ஏ பிாிவு, ‘மொழிச் சிறு­பான்­மை­யி­ன­ரின் குழந்­தை­க­ளுக்­குத் தாய்­மொ­ழி­யில் கற்­பிப்­ப­தற்கு ஒவ்­வொரு மாநி­ல­மும் போது­மான வச­தி­களை வழங்க வேண்­டும்’ என தெரி­விக்­கிறது.

“எனவே, இந்த விவ­கா­ரத்­தில் பிர­த­மர் தலை­யிட்டு குஜ­ராத்­தில் தமிழ்­வ­ழிப் பள்­ளிக்­கூ­டங்­கள் தொடர்ந்து செயல்­பட அனு­ம­திக்க வேண்­டும்,” என்று குறிப்­பிட்­டுள்­ளார் ஆ.ராசா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!