இடி தாக்கி 60 ஆடுகள் கருகி சாம்பலாகின

இடி தாக்கி 60 ஆடுகள் கருகி சாம்பலாகின

1 mins read
d4587b8e-4555-46e7-bfcc-1543df36d86e
படங்கள்: இந்திய ஊடகம் -
multi-img1 of 2

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டைக்கு அருகில் உள்ள செல்லூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்கு சொந்தமான 60 ஆடுகள் இடி தாக்கி சாம்பலாகின.

விவசாயி ராமச்சந்திரன் தனக்கு சொந்தமான ஆடுகளை தன்னுடைய விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து வளர்த்து வந்தார். நேற்று இரவு ராமச்சந்திரனின் ஆடுகள் கொட்டகையில் கட்டப்பட்டிருந்தன.

நேற்றிரவு பெய்த கனமழையின்போது கொட்டகையின் மீது இடி தாக்கியது. அங்கு கட்டப்பட்டிருந்த அனைத்து ஆடுகளும் கருகி சாம்பலாகின.

இந்தச் சம்பவத்தின் தொடர்பில் போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்