ஒரே நாடு, ஒரே ரேஷன் தமிழகத்தில் தொடக்கம்

தமிழகம் முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி நேற்றுத் தொடங்கிவைத்தார்.

தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் பொது விநியோகத் திட்டத்தின் ஒருங்கிணைந்த மேலாண்மைக்கான “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” திட்டத்தை தமிழ்நாட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி துவக்கி வைத்து மூன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய தாக நேற்று ெவளியிட்ட செய்திக் குறிப்பில் தமிழக அரசு தெரிவித்தது.

பொது விநியோகத் திட்டம் 330 கோடி ரூபாய் செலவில் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது புழக்கத் தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக ஆதார் எண் விவரங்களின் அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டம் 2017ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது.

தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மின்னணு குடும்ப அட்டைகள் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களை, தங்களின் விருப்பத்திற்கேற்ப தமிழ்நாடு முழுவதும் எந்த ஒரு நியாயவிலைக் கடையிலும் பெறத்தக்க வகையில் குடும்ப அட்டைகளின் மின்னணு முறை மேம்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் சென்னை, காஞ்சி புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் நேற்று முதல் அமலுக்கு வந்தது. மேலும், தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், இராமநாதபுரம், மதுரை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் இம்மாதம் 16ஆம் தேதியிலிருந்து செயல்படுத்தப்பட விருக்கிறது.

இத்திட்டத்தின் மூலம் தமிழ் நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு புலம்பெயரும் தமிழக மக்களும் பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வரும் குடும்ப அட்டைதாரர்களும் அருகில் உள்ள எந்தவொரு நியாய விலைக் கடைகளிலும் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கிடையே முதியவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக நேரில் வர இயலாத பயனாளிகள் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியும்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, உணவுத் துறை அமைச்சர் இரா. காமராஜ், தலைமைச் செய லாளர் திரு. க. சண்முகம், கூட்டு றவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் எம். சுதா தேவி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!