திமுக கொள்கை பரப்புச் செயலாளராக திண்டுக்கல் லியோனி நியமனம்

1 mins read
aec4bf49-a1e6-4044-9fb0-7657c5397f24
படம்: ஊடகம் -

சென்னை: திமுக கொள்கை பரப்புச் செயலாளராக திண்டுக்கல் ஐ. லியோனி மற்றும் முனைவர் சபாபதி மோகன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து திமுக தலைமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், திமுக கொள்கை பரப்புச் செயலாளர்களாக பொறுப்பு வகித்து வந்த ஆ. ராசா,எம்.பி., துணைப் பொதுச்செயலாளராகவும் - தங்க. தமிழ்செல்வன் மாவட்டப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டதால் அவர்கள் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குப் பதிலாக ஏற்கெனவே கொள்கை பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா, எம்.பி., அவர்களுடன் திண்டுக்கல் ஐ.லியோனி, முனைவர் சபாபதி மோகன் ஆகியோர் கொள்கை பரப்பு செயலாளர்களாக நியமிக்கப்படுகின்றனர் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.