இந்து முன்னணி மாநிலத் தலைவரான காடேஸ்வர சுப்பிர மணியம், சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அதிமுகவில் ஒற்றுமை இருக்காது என்று கூறியுள்ளார். பழனியில் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது, முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் அதிமுகவினர் லாப நோக்கத்துடன் செயல்படுகின்றனர்," என்று அவர் குறிப் பிட்டார்.
"சசிகலா வருகை காரணமாகவே தற்போது அதிமுகவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சசிகலா வருகைக்குப்பின் அதிமுகவில் ஒற்றுமை இருக்காது.
"வருகிற 7ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ள வேளையில் அதுவும் கேள்விக்குறி யாகவே உள்ளது என்று காடேஸ்வர சுப்பிரமணியம் சொன்னார்.
மேலும் பேசிய அவர், அயோத்தி தீர்ப்பை இந்து முன்னணி மனதார வரவேற்பதாகக் கூறினார்.
"கோவில்களுக்குத் தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
"பழனி போன்ற முக்கிய கோவில்களில் திறமையான ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
"அதிமுகவில் இரட்டை தலைமை குறித்து உதயநிதி ஸ்டாலின் நாகரிகமாகவும் மரியாதையாகவும் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.
"இதே போல் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா அநாகரிகமாக பேசியது கண்டனத்துக்குரியது. ஆனால் திமுகவினர் பேசுவது ஆச்சரியம் அல்ல," என்று காடேஸ்வர சுப்பிரமணியம் தெரி வித்தார்.

