ஊர் சுற்றிப் பார்க்க இரவல் தராததால் காருக்கு தீ வைத்த உறவினர்

சென்னையைச் சுற்றிப்பார்க்க விரும்பிய உறவினருக்கு, புதிதாக வாங்கிய காரை இரவல் தராததால் ஆத்திரத்தில் அந்த உறவினர் காரைத் தீவைத்துக் கொளுத்தினார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சின்னமலை பகுதியைச் சேர்ந்த டோமினிக் என்பவர் புதிய கார் ஒன்றை கடந்த ஆண்டு வாங்கினார்.

அந்த காரை ஓட்டிப் பார்ப்பதற்குத் தரும்படி டோமினிக்கின் மனைவியின் தம்பி மகன் ஜர்விஸ் கேட்டார்.

இதற்கு டோமினிக்கின் மகன் மறுத்துவிட்டதை அடுத்து ஜர்வீசுக்கும் டோமினிக் மகனுக்கும் இடையே சண்டை மூண்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜர்வீஸ் காரின் மீது கல்லை எறிந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மீண்டும் ஜர்விஸ் பிரச்சினை செய்ததாகக் கூறப்படுகிறது .

டோமினிக் வீட்டின் வழியாக நண்பர்களுடன் சென்ற ஜர்விஸ், திடீரென காரை அடித்து நொறுக்கியதுடன் பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டு தப்பியோடினார்.

இதுகுறித்து கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் டோமினிக் புகார் அளித்துள்ளார்; விசாரணை தொடர்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!