பள்ளிக்கு ரூ.20 லட்சத்தில் பேருந்து வாங்கித் தந்த முன்னாள் மாணவர்கள்

செங்­கல்­பட்டு மாவட்­டம், சூனாம்­பேடு கிரா­மத்­தில் உள்ள தங்­க­ளது பள்­ளி­யின் முன்­னேற்­றத்­துக்­காக முன்­னாள் மாண­வர்­கள் அனை­வ­ரும் ஒன்று சேர்ந்து உதவிபுரிந்து வரு­கின்­ற னர்.

இம்மாண­வர்­கள் அனை­வ­ரும் தங்­க­ளால் இயன்ற அள­வில் பணத்­தைப் போட்டு தாங்­கள் பயின்ற பள்­ளிக்­காக ரூ.20 லட்­சம் மதிப்­பி­லான சிறிய ரக பேருந்து ஒன்றை வாங்­கிக்­ கொ­டுத்­துள்­ள­னர்.

சூணாம்பேடு கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 1980 முதல் 2005 வரை படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இந்நிகழ்வில் முன்னாள் மாணவ-மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பேசி சிரித்து மகிழ்ந்தனர்.

இப்பள்ளியில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 1,700 பேர் படித்து வந்த நிலையில், தற்போது வெறும் 250 பேர் மட்டுமே படித்து வருகின்றனர்.

போதிய அளவில் போக்குவரத்து வசதி இல்லாதது, குறைவான ஆசிரியர்களே பாடம் நடத்துவது உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் சேர்க்கை குறைந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சூனாம்பேடு முன்னாள் மாணவர் பேரவையினர் வாட்ஸப் குரூப் ஒன்றை உருவாக்கி, தங்களது பள்ளிக்காக என்ன செய்யலாம் என்று ஆலோசித்து அதற்கான பணிகளைத் தொடங்கி னர். போக்குவரத்து வசதி மிக அத்தியாவசியத் தேவை என்பதால் முதற்கட்டமாக முன்னாள் மாண வர்கள் தங்களது செலவில் புதிய பேருந்தை வாங்கித் தந்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!