கிருமித்தொற்றால் இறந்தவர்களில் 45 விழுக்காட்டினர் நீரிழிவு நோயாளிகள்

கொரோனா கிரு­மித்­தொற்­றால் இறந்­த­வர்­களில் 45% மக்­கள் நீரி­ழிவு நோயா­ளி­கள் என்ற அதிர்ச்­சி­யூட்­டும் தக­வல் தமி­ழ­க, ஆந்­திர மாநில அர­சு­கள் இணைந்து நடத்­திய ஆய்­வின் வழி தெரி­ய­வந்­துள்­ளது.

ஆய்­வுக் குழு­வில் தமி­ழ­கத்­தைச் சேர்ந்த ஐஏ­எஸ் அதி­கா­ரி­க­ளான டாக்­டர் பி.சந்­திர மோகன், டாக்­டர் ஜெ.ராதாகிருஷ்­ணன், டாக்­டர் கே. கோபால் ஆகி­யோர் இடம்­பெற்­ற­னர்.

ஒரு­வ­ருக்கு ஒரு­வர் மூன்று அடி இடை­வெளியைப் பின்பற்றாமல் இருப்­ப­வர்­களும் முகக்­க­வ­சம் அணி­யா­மல் இருப்­ப­வர்­களும்தான் தொற்­றுக்கு அதி­கம் ஆளாகின்­ற­னர் என்­றும் மூடப்பட்ட நிலையிலான குளிர்சாதன வச­தி­யு­டைய போக்கு வரத்தில் 6 மணிநேரத்துக்கும் மேலாக இருப்பவர்களுக்கு தொற்று ஏற்­படும் வாய்ப்பு 79% ஆக உள்­ளது என்­றும் ஆய்­வா­ளர்­கள் தெரி வித்­துள்­ள­னர்.

தமி­ழ­கம், ஆந்­திரா ஆகிய இரு மாநி­லங்­க­ளி­லும் 5 லட்­சத்து 75 ஆயி­ரத்து 71 பேரி­டம் இந்த ஆய்வு நடத்­தப்­பட்டு உள்­ளது. அவர்­களில் கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்ட 84 ஆயி­ரத்து 965 பேரி­டம் தொற்று பர­வல் முறை குறித்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

ஆய்­வ­றிக்­கை­ விவ­ரம்: “ஒரே வய­து­டை­ய­வர்­க­ளால் தொற்று பர­வும் அபா­யம் அதி­கமாக உள்­ளது.

“இந்­தி­யா­வில் கொரோனா தொற்று பாதிப்பு கார­ண­மாக உயி­ரி­ழந்­த­வர்­களில் 40 முதல் 69 வய­து­டை­ய­வர்­களே அதி­கம்.

“கிருமித்தொற்றால் பாதிக்­கப்­பட்டு மர­ண­மடைவோரின் எண்­ணிக்கை 5 முதல் 17 வயது வரை 0.05% ஆக­வும் 85 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளின் உயி­ரி­ழப்பு 16.6% ஆக­வும் உள்­ளது.

“கொரோ­னா­வால் இறந்­த­வர்­களில் 63% பேர் குறைந்தபட்­சம் வேறு ஏதா­வது ஒரு நோயால் பாதிக்­கப்­பட்டு இருந்தனர். 36% பேர் இரண்டு அல்­லது அதற்­கும் மேற்­பட்ட நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­னர். கிருமி பாதிப்பால் உயி­ரி­ழந்­த­வர்­களில் 45% பேர் நீரி­ழிவு நோயா­ளி­கள்.

“இந்தியாவில் கொரோனா மரணங்கள் 50 முதல் 64 வயதுக்கு இடைப்பட்டவர்களிடம்தான் அதிகம் நேர்ந்துள்ளது,” எனத் தெரிய வந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!