நேர்மையுடன் வாழ வலியுறுத்தி ஆளில்லா கடை திறப்பு

நாட்டின் தந்தை காந்தி யடிகளின் பிறந்தநாள் விழா கடந்த 2ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதுமுதல் தமிழகத்தில் ஆங் காங்கே வித்தியாசமான நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இதுபோல், பாபநாசத்திலும் ஆளில்லா கடையைத் திறந்து வைத்து வியாபாரம் செய்துள்ளனர்.

காந்தியைப் போலவே மக்களும் நேர்மையைக் கடைப்பிடிக்க வலி யுறுத்தி இந்த ஆளில்லா கடை திறக்கப்பட்டது.

அந்தக் கடையில் காசாளர், பொருட்களை எடுத்துக் கொடுப்ப வர், விற்பனையாளர் என யாருமே இல்லை. கண்காணிப்பு கேமராவும் வைக்கப்படவில்லை.

திறக்கப்பட்டிருக்கும் கடையில் இருந்து மக்களே தங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு, அதற்கான பணத்தை அங்கு வைக்கப்பட்டி ருக்கும் ஒரு பாத்திரத்தில் போட்டுச் செல்லவேண்டும்.

ஆளில்லா கடையில் வீட்டு உபயோகப் பொருட்கள், எழுது பொருட்கள், தின்பண்டங்கள் ஆகியன விற்பனைக்கு வைக்கப் பட்டு இருந்தன. பொருட்களின் விலையும் அதன் மீது எழுதி ஒட்டப்பட்டிருந்தது.

இதுகுறித்து ரோட்டரி சங்க செயலாளர் ஜெயக்குமார் கூறு கையில், “நேர்மை, உண்மை, நாணயம், நம்பிக்கை நிறைந்த இந்தியாவை உருவாக்கவேண்டும் என்பதுதான் காந்தியின் கனவு. அவர் கண்ட கனவினை நனவாக்க பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் காந்தி பிறந்தநாளில் நேர்மை குறித்து பொதுமக்களிடம் விழிப் புணர்வை உருவாக்கும் வகையில் இந்த ஆளில்லா கடை திறக்கப் பட்டது.

21வது ஆண்டாக தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேருந்து நிறுத்தத்தில் இந்த ஆளில்லா கடை திறக்கப்பட்டு உள்ளது. இந்தக் கடை பொதுமக்களை நேர்மையோடு வாழத் தூண்டும். இந்த கடை மூலம் கிடைக்கும் வருவாய் மக்கள் சேவைக்குப் பயன்படுத்தப்படும்,” என்று கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!