மாநிலப் பொருளாதார வளர்ச்சிக்கு தொடா்ந்து அயராது பாடுபடுவோம் முதல்வர்: தமிழகத்தின் வருவாய் கூடியுள்ளது

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா தொற்­றின் தாக்­கம் இன்­னும் ஒரு கட்­டுக்­குள் வரா­மல் உள்­ளது. இந்த மோச­மான கால­கட்­டத்­தி­லும் மாநில அர­சின் வரு­வாய் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தாக முதல்­வர் கே.பழ­னி­சாமி பெரு­மி­தம் தெரி­வித்­துள்­ளார்.

கொரோனா தொற்று தொடர்­பான செல­வு­க­ளுக்கு இடை­யே­யும் தமி­ழ­கத்­தின் வரி வரு­வாய் உயர்ந்­துள்­ளது மகிழ்ச்சி அளிப்­ப­தா­க­வும் முதல்வா் மேலும் கூறி­னார். வரு­வாய் அதி­க­ரிப்பு குறித்து முதல்­வர் தனது டுவிட்­டர் பக்­கப் பதி­வில், “கடந்த ஆண்டு ஜூலை மாதத்­து­டன் மாநி­லத்­தின் சொந்த வரு­வாயை ஒப்­பி­டும்­போது, இந்த ஆண்டு ஜூலை மாதத்­தில் சாத­க­மான வளர்ச்சி காணப்­பட்­டுள்­ளது.

“ஆளும் அதி­முக அர­சின் தொடர் முயற்­சி­கள் கார­ண­மா­கவே இந்­த­ள­வுக்கு வரு­வாய் அதி­க­ரிப்பு சாத்­தி­ய­மாகி உள்­ளது. மாநிலத்­தின் பொரு­ளா­தார வளர்ச்­சியை மேலும் மேம்­படச் செய்ய அதி­முக அரசு தொடர்ந்து பணி­யாற்­றும்,” என்று உறு­தி­ய­ளித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தின் சொந்த வரி வரு வாய் கடந்த மாதங்­க­ளைக் காட்­டி­லும் இப்­போ­தும் மேம்­பட்டு வரு­கிறது. அத்­து­டன், மத்­திய அர­சின் வரி வரு­வா­யில் இருந்து கிடைக்­கக் கூடிய பங்­கும் உயா்ந்­துள்­ளது.

கடந்த ஜூலை மாதத்­தில் வரி வரு­வாய் ரூ.14,041 கோடி­யாக இருந்­தது. இது கடந்த ஆண்­டைக் காட்­டி­லும் ரூ.2,285 கோடி கூடு­த­லா­கும்.

மாநி­லத்­தின் சொந்த வரி வரு­வாய் அள­வைப் பாா்க்கும்­போது அது­வும் உயா்ந்தே உள்­ளது. கடந்த ஆண்டு ஜூலை­யில் ரூ.7,765.15 கோடி­யாக இருந்த மாநி­லத்­தின் சொந்த வரி வரு­வாய் கடந்த ஜூலை­யில் ரூ.8,387.23 கோடியாக அதி­க­ரித்­தி­ருந்­தது.

பொருள், சேவை வரி விதிப்­பில் மாநி­லத்­தின் வரி வரு­வாய் கடந்த ஜூலை­யில் மட்­டும் ரூ.2,997.84 கோடி­யாக அதி­க­ரித்­துள்­ளது. இது கடந்த ஆண்டு ஜூலை­யில் ரூ.2,360.40 கோடி­யாக இருந்­தது. அதே­ச­ம­யம், முத்­தி­ரைத் தாள், பதி­வுத் துறை கட்­ட­ணங்­கள் வழி தமி­ழக அர­சுக்­குக் கிடைக்க வேண்­டிய வரு­வாய் 31.8% அள­வுக்­குக் குறைந்­துள்­ளது.

இருப்­பி­னும், பிற வரு­வாய் வர­வு­கள் அதி­க­ரித்­தி­ருப்­பது சாதக மான அம்­ச­மா­கவே பாா்க்கப்­படு வதா­க­வும் அரசு தெரி­வித்­துள்­ளது.இதற்­கி­டையே, அதிக கடன் வாங்­கிய மாநி­லங்­களில் மகாராஷ் டிரம் முத­லி­டத்திலும் தமி­ழ­கம் இரண்டாம் இடத்­திலும் உள்­ள­தா­க­வும் 2020-21ஆம் ஆண்­டின் முதல் பாதியில் ரூ.48,000 கோடியை தமி­ழ­கம் இது­வரை கட­னா­கப் பெற்­றுள்­ள­தா­க­வும் தக­வல்­கள் கூறியுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!