நாடெங்கும் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டதா என்பதைக் கண்டறிய பல்வேறு மாநிலங் களில் உள்ள 69 மாவட்டங்களில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் (ஐசிஎம்ஆர்) ஆய்வு நடத்தியது.
தமிழகத்தில் சென்னை, கோவை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 12,405 ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் 2,673 பேருக்கு (21.5%) நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் 2ஆம் கட்ட ஆய்வை நடத்தியதில், சென்னையில் 33.4%, கோவையில் 7.2%, திருவண்ணாமலையில் 8.5% பேருக்கு கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது தெரியவந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் தெரிவித்துள்ளது.

