சீமான்: பேரப் பிள்ளைகளோடு விளையாடுங்கள், அரசியல் வேண்டாம்

1 mins read
1c0841e1-048b-48f8-a3ac-4dd60231a058
படங்கள்: ஊடகம் -

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான் ரஜினியை அரசிய லுக்கு வரவேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளார்.

ரஜினிகாந்த் அரசியலில் இறங்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து இப்ேபாதும் யோசனையில்தான் இருந்து வருகிறார். அரசியலில் களமிறங்கப்போவதாக அவ்வப்போது பேசி வந்தாலும் இதுவரை கட்சி ஆரம்பிக்க வில்லை. ஆனாலும், அவரது ரசிகர்கள் அவர்மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உள்ள னர். தமிழக முதல்வராக வரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், "இமய மலை செல்லுங்கள், பேரன் பேத்தியுடன் விளையாடுங் கள். ஆனால், அரசியலுக்கு மட்டும் வரவேண்டாம். புகழ்ச்சியை மட்டுமே பார்த்த வரால் அவச் சொற்களைத் தாங்கமுடியாது," என சீமான் கூறியுள்ளார்.