ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள முதல்நாடு கிராமத்தில் மூன்று தலைமுறையாக ஆண்கள் மட்டுமே வழிபாடு நடத்தும் ஒரு விநோத திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்தக் கிராமத்தின் எல்லை தெய்வமான பிடாரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நள்ளிர வில் கூடும் ஆயிரக்கணக்கான ஆண்கள், அங்கு அசைவ உணவை சமைத்து, வழிபாடு நடத்தி, தங்களது நேர்த்திக்கடனை நிறை வேற்றுகின்றனர்.
அதன் பின்னர் பக்தர்களுக்கு இந்த உணவு பரிமாறப்படுகிறது.பின்னர் மீதமிருக்கும் உணவை அங்கு குழிவெட்டி புதைத்து விடு கின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி மாதத்தின் 3வது வாரத்தில் நடை ெபறும் இவ்விழாவின்ேபாது, கடந்த ஆண்டு விளைந்த நெல்லை இடித்து, அதில் பச்சரிசி சாதம் சமைத்து எல்லைப் பிடாரி அம்ம னான குமரிப்பெண்ணை பீடம் அமைத்து வழிபடுகின்றனர்.
விழாவில் கமுதி சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்களும் விருதுநகர், சிவ கங்கை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த 5,000க்கும் மேலான ஆடவர்களும் கலந்துகொண்டனர்.
கொரோனா பரவலில் இருந்து மக்களைப் பாதுகாக்கவேண்டியும் விவசாயத்தில் நல்ல மகசூல் செழிக்க வேண்டியும் மழைபெய்ய வேண்டியும் பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர்.

