முதல்வர் வேட்பாளர் பிரச்சினைக்கு முடிவு

தமிழகத்தை ஆளும் அதி­மு­க­வில் முதல்­வர் வேட்­பா­ளர் பிரச்­சினை இன்று முடி­வுக்கு வரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

வரு­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் யாரை முதல்­வர் வேட்­பா­ள­ராக நிறு­த்­து­வது என தற்­போ­தைய முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சா­மிக்­கும் கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ளரான பன்­னீர்­செல்­வத்­துக்­கும் இடையே போட்டி நில­வு­கிறது. இரு­வ­ரும் தன்­னை முதல்­வர் வேட்­பா­ள­ராக அறி­விக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­து­வ­தாக கட்சி வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்த நிலை­யில் அதி­மு­க­வின் செயற்­கு­ழுக் கூட்­டம் கடந்த மாதம் 28ஆம் தேதி நடந்­தது. அந்­தக் கூட்­டத்­தில் முதல்­வர் வேட்­பா­ளர் யார்? என்ற பேச்சு எழுந்­த­போது பன்­னீர்­செல்­வம் தரப்­பி­னர் முத­லில் பொதுக்­கு­ழு­வில் அறி­வித்த வழி­காட்­டு­தல் குழுவை அமைத்­து­விட்டு முதல்­வர் வேட்­பா­ளர் குறித்­துப் பேச­லாம் என்­ற­னர்.

இதற்கு எடப்­பாடி தரப்­பி­லி­ருந்து எதிர்ப்பு கிளம்­பி­யது. அத­னைத் தொடர்ந்து பன்­னீர் செல்­வம், பழனி­ சாமி இரு­வ­ருமே தனித்­த­னி­யாக தங்­கள் கருத்­து­களை நிர்­வா­கி­கள் முன்பு வைத்­த­னர். இரு­வ­ருக்­கும் இடையே ஒரு­மித்த கருத்து ஏற்­ப­டா­மல் போன­தால் செயற்­கு­ழு­வில் எந்த முடி­வும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இத­னால் அக்­டோ­பர் 7ஆம் தேதி(இன்று) அதி­மு­க­வின் முதல்­வர் வேட்­பா­ளர் குறித்து முடிவு அறி­விக்­கப்­படும் என்று அதி­முக தலைமை தெரிவித்தது.

இதை­ய­டுத்து பன்­னீர்­செல்­வ­மும் எடப்­பாடி பழ­னி­சா­மி­யும் ஆத­ர­வா­ளர்­க­ளு­டன் தனித்­த­னி­யாக ஆலோ­சனை நடத்­தி­னர்.

பன்­னீர்செல்­வம் தனது சொந்த மாவட்­ட­மான தேனிக்­குச் சென்று அங்கு அவ­ரு­டைய பண்ணை வீட்­டில் மூன்று நாள்­கள் தனது ஆத­ர­வா­ளர்­க­ளு­டன் தனி­யாக ஆலோ­சனை நடத்­தி­னார்.

இதற்­கிை­டயே இரு­ த­லை­வர் ­க­ளுக்கு இடையே ஏற்­பட்ட மோத­லைத் தீர்த்து வைக்க அதி­மு­க­வின் மூத்த நிர்­வா­கி­களும் களத்­தில் இறங்­கி­னர்.

முதல்­வரை அதி­மு­க­வின் துணை ஒருங்­கி­ணைப்­பா­ளர்­கள் முனு­சாமி, வைத்­தி­ய­லிங்­கம், மூத்த அமைச்­சர்­கள் வேலு­மணி, தங்­க­மணி உள்­ளிட்­ட­வர்­கள் சந்­தித்து ஆலோ­சனை நடத்­தி­னர்.

பன்­னீர்­செல்­வத்­தி­டம் ஏற்­கெ­னவே ஆர்.பி.உத­ய­கு­மார் நேரில் சந்­தித்­துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ யி­ருந்­தார். அத­னைத் தொடர்ந்து துணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் கே.பி.முனு­சாமி, பன்­னீர்செல்­வத்தை தொலை­பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி­யி­ருக்­கி­றார்.

அப்­போது பன்­னீர்­செல்­வம், “முதல்­வர் வேட்­பா­ளர் குறித்த பேச்சு இப்­போது தேவையா? முத­லில் வழி­காட்­டு­தல் குழுவை அமைக்க வேண்­டும். முதல்­வர் வேட்­பா­ளர் போட்­டி­யில் நான் இருக்­கி­றேனா, இல்­லையா? என்­பது இப்­போது பிரச்சினை அல்ல. அது தேர்­தல் முடிந்த பிறகு பேசிக்­கொள்ள வேண்­டிய பிரச்­சினை,” என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்.

இத­னைத்­தொ­டர்ந்து முனு­சாமி, முதல்­வ­ரி­டம் பன்­னீர் செல்­வத்­தின் நிலைப்­பாடு குறித்­துப் பேசி­யி­ருக்­கி­றார். இதன் பிறகு சில பிரச்­சினைகளுக்கு முற்­றுப்புள்ளி வைக்க முதல்­வர் ஒப்­பு­தல் அளித்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அதன்­படி, அக்­டோ­பர் 7ஆம் தேதி (இன்று) அதி­மு­க­வின் வழி­காட்­டு­தல் குழுவை அமைக்க ஒப்­பு­தல் அளிக்கலாம்.

அதே­போல் “முதல்­வர் வேட்­பா­ளர் விவ­கா­ரத்­தில் பன்­னீர்செல்வம் எனக்கு ஆத­ர­வாக இருக்­க­வேண்­டும்” என்று முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி சொல்ல, பன்­னீர் தரப்­பி­லும் இதற்கு எதிர்ப்பில்லை என தெரி­விக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இத­னால் வழி­காட்­டு­தல் குழு­வும் முதல்­வர் வேட்­பா­ள­ரும் ஒரே நேரத்­தில் இன்று அறி­விக்­கப்­பட வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!