கள்ளக்குறிச்சி எம்எல்ஏ திருமண விவகாரம் மகளை மீட்டுத் தரக் கோரி உயர் நீதிமன்றத்தில் தந்தை மனு

அதி­மு­க­வின் கள்­ளக்­கு­றிச்சி சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரான பிரபு தனது மகளை கடத்­திச் சென்று­விட்­ட­தா­க­வும் அவ­ரி­ட­மி­ருந்து மகளை மீட்­டுத் தர வேண்­டும் என்­றும் பெண்­ணின் தந்தை உயர் நீதி­மன்­றத்­தில் ஆட்­கொணா்வு மனு­ ஒன்றைத் தாக்­கல் செய்து உள்ளாா்.

தியா­க­து­ரு­கம் கிராம நிர்­வாக அதி­கா­ரி­யான சுவா­மி­நா­தன் தாக்­கல் செய்­துள்ள மனு­வில், எனது மகள் சவுந்­தா்யா, திருச்­செங்­கோட்­டில் உள்ள தனியாா் கல்­லூ­ரி­யில் இளங்­கலை இரண்­டாம் ஆண்டு படித்து வந்­தாள். என்­னு­டைய மகளை கள்­ளக்­கு­றிச்சி சட்­டப்­ பேரவை உறுப்­பினா் பிரபு ஆசை­வாா்த்­தை­கள் கூறி கடத்­தி­யுள்ளாா். இது­தொ­டா்­பாக காவல்­து­றை­யில் புகாா் அளித்­தும் எந்­த­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை. புகாா் கொடுத்­த­தால் எனக்கு மிரட்­டல் வரு­கிறது. எனவே மாய­மான எனது மகளை மீட்டு நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யாக்க காவல்­து­றை­யி­ன­ருக்கு உத்­த­ர­விட வேண்­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த மனு விரை­வில் விசா­ர­ணைக்கு வரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. கடந்த திங்­கட்­கி­ழமை அன்று தலித் சமூ­கத்­தைச் சேர்ந்த எம்­எல்ஏ பிரபு, வயது 36, தான் காத­லித்து வந்த எஸ். சவுந்­தர் யாவை, வயது 19, திரு­ம­ணம் செய்­து­கொண்­டார்.

இதை கேள்­வி­யுற்று எம்­எல்ஏ வீட்­டுக்கு வந்த பெண்­ணின் தந்தை தன்­னைத் தானே தீயிட்­டுக் கொள்ள முயற்சி செய்­தார். எம்­எல்ஏ பிரபு தனது மகளின் விருப்­ப­மில்­லா­மல் திரு­ம­ணம் செய்து கொண்­ட­தா­க­வும் அவர் குற்­றம் சாட்­டி­னார்.

“நாங்­கள் பிரா­ம­ணர்­கள். எங்­கள் வீட்­டில் 14 ஆண்­டு­க­ளாக பிரபு வளர்ந்து வந்­தார். அவரை எனது மக­னாகவே கரு­தி­னேன். ஆனால் அவர் நம்­பிக்கை மோசடி செய்து விட்­டார். எனது மகள் மன­த­ள­வில் திருமணத்­துக்கு தயா­ரா­க­வில்லை,” என்­றும் அவர் கூறி­னார். ஆனால் அவ­ருக்கு எந்­த­வித மிரட்­ட­லும் விடுக்­க­வில்லை என்று கூறி­யுள்ள பிரபு, சவுந்தர்யாவை காத­லித்து அவரது சம்மதத்துடன் திருமணம் செய்­து­கொண்­ட­தாக தெரி­வித்­துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!