தங்கக் கடத்தல் வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

தங்கக் கடத்தல் வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

1 mins read
3cf326ce-4f26-4a32-af03-8537a322568b
படம்: ஊடகம் -

திரு­வ­னந்­தபுரம்: கேர­ளா­வில் ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சில் உள்ள தூத­ர­கத்­தின் பெய­ரைப் பயன்­ப­டுத்தி நடந்­துள்ள தங்­கக் கடத்­தல் தொடர்­பில் முக்­கிய குற்­ற­வாளி உட்­பட இரு­வர் சிக்­கி­யுள்­ளனர்.

ஐக்­கிய அரபு சிற்­ற­ரசு போலி­சார் அவர்களைக் கைது செய்­ததாகத் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. தூத­­ரகத்­தின் பெய­ரில் பல கோடி மதிப்­புள்ள தங்­கம் கேரளா­வுக்­குள் கடத்தி வரப்­பட்­டது அண்­மை­யில் அம்­ப­ல­மா­னது. இது தொடர்­பாக தூத­ர­கத்­தின் முன்­னாள் ஊழி­ய­ரான ஸ்வப்னா சுரேஷ், சந்­தீப் நாயர் உள்­ளிட்­டோர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

மேலும், கேரள மாநில அர­சின் மூத்த ஐஏ­எஸ் அதி­காரி சிவ­சங்­க­ருக்­கும் கடத்­த­லில் தொடர்­பு இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் கடத்­தல் வழக்­கின் மற்­றொரு முக்­கிய குற்­ற­வா­ளி­யான கடத்­தல் வழக்­கில் தொடர்­பு­டைய முக்­கிய குற்­ற­வா­ளி­கள் ஃபைசல் பரீத், ராபின்ஸ் ஹமீத் ஆகி­யோர் தற்­போது பிடி­பட்­டுள்­ள­னர்.