தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சசிகலாவின் ரூ.2,000 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள் முடக்கம்

1 mins read
9d6731cd-0474-44b2-9e42-bb64a52c7886
படம்: ஊடகம் -

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான ரூ.2,000 கோடி மதிப்பிலான சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் சொத்துகள் பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு கோத்தகிரி வருவாய் ஆய்வாளர் லதா, கிராம அதிகாரி சத்யா ஆகியோருடன் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், இதுகுறித்த அறிவிப்பை நேரடியாகப் படித்துக் காட்டி, அதை அங்குள்ள சுவரிலும் ஒட்டிச்சென்றனர்.

இதேபோல, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர், சிறுதாவூர் பகுதியில் உள்ள சிறுதாவூர் பங்களாவிலும் அறிவிப்புக் கடிதம் ஒட்டப்பட்டுள்ளது.

அத்துடன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று அறிவிக்கப்பட்ட ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கும் இந்த அறிவிப்புக் கடிதங்கள் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கின் தொடர்பில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் பெங்களூரு மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்