300 ஆண்டுகள் பழமையான நீர்வழி சுரங்கப் பாதை கண்டுபிடிப்பு

தஞ்சையில் மன்னர்கள் காலத்தில் பயன்பாட்டில் இருந்த 300 ஆண்டுகள் பழமையான நீர் வழி சுரங்கப் பாதை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தின்போது மேலவீதி அருகே மிகவும் பிரம் மாண்டமான அய்யன்குளம் உரு வாக்கப்பட்டது.

தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள சிவகங்கை குளத்தில் இருந்து அய்யன் குளத்திற்குச் செல்லும் மன்னர்கள் கால சுரங்க நீர் வழித்தடங்கள் காலப்போக்கில் மறைந்த நிலையில், தற்போது குளத்தில் இருந்து 300 மீட்டர் தூரம் வரையிலான சுரங்கவழிப்பாதை யைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தப் பாதையில் மூன்று இடங்களில் உள்ள ஆய்வுக் குழி கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதை புனரமைக்கும் பணியில் அதி காரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

சமூக ஆர்வலர்கள், மாநகராட்சி அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப் பாதை 300 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை குளத்தில் இருந்து அய்யன்குளம் வரை மொத்தம் 7 ஆய்வுக் குழிகள் உள்ளன. தற்போது மேலும் நான்கு ஆய்வுக் குழிகளைத் தேடும் பணி தொடர்கிறது.

இந்தக் குழிகள் கண்டுபிடிக்கப் பட்டு நீர்வழிப்பாதையைச் சுத்தம் செய்த பின்னர் சிவகங்கை குளத் தில் இருந்து அய்யன் குளத்திற்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப் படும் என அய்யன்குளத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!