முதல்வர் பழனிசாமி: இன்னும் நூறாண்டுகள் கழகம் வாழ பாடுபடுவேன்

தொண்டர்களின் விருப்பம்போல் கட்சியையும் மக்களையும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச்செல்வேன். அடுத்த நூறாண்டு காலம் இந்தப் பூமியில் அதிமுக இயக்கம் உயிர்ெபற்று நிலைத்திருக்க அயராது பாடுபடு வேன் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வரும் 2021ஆம் ஆண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இத் தேர்தலில், அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நேற்றும் தமிழகத்தில் ஆங்காங்கே வெடி வைத்தும் இனிப்புகளை வழங்கியும் தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்நிலையில், முதல்வர் தமது டுவிட்டர் பதிவில், “புரட்சித்தலைவர் ஆரம்பித்த இயக்கத்தில், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இருந்த இடத்தில் அடுத்த முறையும் எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி.

“என் மக்கள் எதற்காகவும் யாரி டத்திலும் கையேந்தி நிற்காத காலத்தை உருவாக்குவேன் என்னும் ஜெயலலிதாவின் கனவை நன வாக்கும் கடமை நம் முன்னே காத்திருக்கிறது.

“தொண்டர்களின் எண்ணத்திற் கேற்ப கழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லவும் அம்மா கூறியதுபோல் அடுத்த நூறாண்டு காலத்திற்கும் கழகத்தை வெற்றி இயக்கமாக உருவாக்கிடவும் அய ராது உழைப்பேன் என உறுதி ஏற்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “மக்கள் நலனுக்காக அல்லாமல் தங்கள் நலனுக்காகவே ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒன்று சேர்ந்துள்ள னர். அதிமுகவில் ஒருவரையொ ருவர் வீழ்த்த முயன்று வருகின்றனர். அதிமுகவிற்கு இது ஆட்சியல்ல, வீழ்ச்சி,” என்று சாடியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!