ஊராட்சி மன்றத் தலைவருக்கு அவமதிப்பு

ஊராட்சித் தலைவரை தரையில் அமர வைத்து அவமதித்த சம்பவம் சமூக ஊடகங் களில் பரவியதால் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 17ஆம் தேதி சிதம்­ப­ரம் அருகே ஊராட்சி மன்றக் கூட்­டம் நடந்­தது. இந்­தக் கூட்­டத்­திற்கு ஊராட்சி மன்றத் தலை­வர், ஊராட்சி மன்ற துணைத் தலை­வர் மற்­றும் உறுப்­பி­னர்­கள் அழைக்­கப்­பட்டு இருந்­த­னர். இதில் பங்­கேற்க வந்த தெற்கு திட்டை ஊராட்­சி மன்றத் தலை­வ­ரான ஆதி­தி­ரா­வி­டர் சமூ­கத்­தைச் சேர்ந்த ராஜேஸ்­வரி தரை­யில் அமர வைக்­கப்­பட்டு உள்­ளார். இந்த நிலை­யில் ஊராட்­சி மன்றத் தலை­வரை தரை­யில் அமர வைக்கப்­பட்ட படம் சமூக ஊட­கங்­களில் பர­வி­யது. இதை­ய­டுத்து தெற்கு திட்டை ஊராட்சி துணைத்­த­லை­வர் மோகன்­ராஜ் மீது வன்­கொடுமை தடுப்புச் சட்­டத்­தின்கீழ் வழக்கு பதிவு செய்­யப்­பட்­டது.

ஊராட்சி செயலர் சிந்துஜா மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே தெற்கு திட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜாவை மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் செய்துள்ளார்.

தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவி அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மக்களிடம் ஆட்சியர் சந்திரசேகர் சாகமுரி நேற்று நேரில் விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்திரசேகர், தலைமறைவான தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் மோகனை தேடி வருகிறோம் என்றும் ஊராட்சி மன்றத் தலைவிக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!