தமிழகத்துக்கு தண்ணீர் தரும் முல்லைப்பெரியாறு அணை; 125 ஆண்டுகள் நிறைவு

கம்­பம்: தமி­ழ­கத்­திற்கு முல்­லைப் பெரி­யாறு அணை­யி­லி­ருந்து தண்­ணீர் திறக்­கப்­பட்டு நேற்­று­டன் 125 ஆண்­டு­கள் நிறைவுபெற்று உள்­ளது.

1895ஆம் ஆண்டு அக்­டோ­பர் 10ஆம் தேதி­யன்று (10-10-1895) தேனி, திண்­டுக்­கல், மதுரை, சிவ­கங்கை, ராம­நா­த­பு­ரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்­க­ளின் குடி­நீர் மற்­றும் பாச­னத்­திற்­கான வாழ்­வா­தா­ர­மாக விளங்­கு­கின்ற முல்­லைப் பெரி­யாறு அணையிலிருந்து இந்த மாவட்­டங்­க­ளுக்குத் தண்­ணீர் திறந்­து ­விடப்­பட்­டது.

நேற்று 125வது ஆண்­டு­கள் நிறைவுபெற்­றதை பொது­மக்­களும் விவ­சா­யி­களும் சிறப்­பாக கொண்­டாடி மகிழ்ந்­த­னர்.

18ஆம் நூற்­றாண்­டின் இறு­தி­யில் தென்தமி­ழ­கத்தை வளப்­ப­டுத்தி வந்த ஆறு­கள் பொய்த்­து­விட்­டன.

இதனால் வேளாண்­மையை மேம்­ப­டுத்த 1798ல் இரா­ம­நா­த­பு­ரம் சேது­பதி மன்­னர், அமைச்­சர் முத்து இரு­ளப்­ப­ரில் துவங்கி 1808இல் ஜேம்ஸ் கால்­டு­வெல், 1862இல் மேஜர் ரைவீஸ், மேஜர் பேயின், 1870இல் ஸ்மித் என பலர் ஆய்வு களும் திட்­டங்­களும் தயார் செய்த னர். ஆனால் இறு­தி­யில் கர்­னல் ஜான் பென்­னி­குக் தலை­மை­யில் முல்­லை­யா­றுக்­கும் பெரி­யா­றுக்­கும் நடுவே 152 அடி உயர அணையைக் கட்ட பிரிட்­டிஷ் அரசு முடிவு செய்­தது. அணை நீரா­னது எல்­லாக் காலங்­க­ளி­லும் தமி­ழ­கத்­திற்கு கிடைக்க வேண்­டும் என்ற நோக்­கில் திரு­வி­தாங்­கூர் சமஸ்­தா­னத்­து­டன் 999 ஆண்­டு­க­ளுக்­கான ஒப் பந்­தத்தை அக் 29, 1886இல் பிரிட்­டிஷ் அரசு செய்துகொண்­டது.

இதை­ய­டுத்து ரூ.43 லட்­சம் திட்ட மதிப்­பீட்­டில் கர்­னல் பென்­னி­குக் தலை­மை­யில் பிரிட்­டிஷ் ராணு­வத்­தின் கட்­டு­மா­னத்­துறை இந்த அணை­யைக் கட்­டும் பணி­யில் இறங்­கி­யது. பென்­னி­குக்­கின் தீவிர முயற்சியால் 1895இல் முல்லைப் பெ­ரி­யாறு அணை கட்­டி­ மு­டிக்­கப்­பட்­டது. அதே ஆண்டு (இந்­திய நேரப்­படி) அக்­டோ­பர் 10, 1895 மாலை 6 மணிக்கு சென்னை மாகாண ஆளு­நர் வென்­லாக் தேக்­க­டிக்கு வந்து, பெரி­யாறு அணைக்­கட்டு தண்­ணீரை தமி­ழ­கப் பகு­திக்கு திறந்­து­வைத்­தார்.

அன்­றி­லி­ருந்து இன்று வரை 125 ஆண்­டு­க­ளாக தலை­மு­றை­கள் கடந்­தும் தண்­ணீர் கொடுத்­து தமி­ழ­கத்­தின் தேனி, திண்­டுக்­கல், மதுரை, சிவ­கங்கை, ராம­நா­த­பு­ரம் ஆகிய ஐந்து மாவட்­டங்­க­ளின் விவ சாயத்­திற்­கும் குடி­நீ­ருக்­கும் முக்­கிய ஆதா­ர­மாக முல்­லைப்­பெ­ரி­யாறு அணை இருந்து வரு­கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!