பாஜகவில் இணைந்தார் நடிகை குஷ்பு

நடிகை குஷ்பு திடீ­ரென காங்­கி­ரஸ் கட்­சி­யில் இருந்து விலகி பாஜ­க­வில் இணைந்­துள்­ளார்.

நேற்று டெல்­லி­யில் பாஜக தேசிய தலை­வர் ஜே.பி. நட்டா முன்­னி­லை­யில் அக்­கட்­சி­யில் இணைந்த அவர் பிர­த­மர் மோடி போன்ற தலை­வர்­தான் நாட்­டுக்­குத் தேவை என்­னும் புரி­த­லுக்­குத் தாம் வந்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

டெல்லி செல்­வ­தற்கு முன்பு டுவிட்­ட­ரில் பதி­விட்ட அவர் மாற்­றம் என்­பது தவிர்க்க முடி­யா­தது என்­றும் பல­ரும் தன்­னி­டம் ஒரு மாற்­றத்­தைப் பார்ப்­ப­தா­க­வும் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

டெல்­லி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், இந்­தி­யா­வில் பல கோடி பேர் பிர­த­மர் மோடி மீது நம்­பிக்கை வைத்­துள்­ள­தா­க குறிப்பிட்டார்.

“ஒரு கட்சி தமக்­கான தலை­மை­யையே கண்­டு­பி­டிக்க முடி­யாத சூழ­லில் எப்­படி நாட்­டைக் காக்க முடி­யும்? எதிர்க்­கட்­சி­யில் இருக்­கும்­போது ஆளும்­த­ரப்பை விமர்­சிக்க வேண்­டிய கட்­டா­யம் இருந்­தது. என­வே­தான் தனிப்­பட்ட நிலைப்­பாட்டை மீறி ஒரு கட்­சி­யின் தேசி­யத் தொடர்­பா­ள­ராக இருந்­த­போது அக்­கட்­சி­யின் நிலை­ப்பாடு குறித்­துப் பேச­வேண்டி இருந்­தது,” என்­றார் குஷ்பு.

இதற்­கி­டையே காங்­கி­ரஸ் தலைவி சோனி­யா­வுக்கு அனுப்­பிய கடி­தம் ஒன்­றில் அக்­கட்­சி­யு­ட­னான உறவை முறித்­துக் கொள்­வ­தாக குஷ்பு குறிப்­பிட்­டுள்­ளார்.

காங்­கி­ரஸ் கட்சி நாடா­ளு­மன்­றத்­தில் மிகப்­பெ­ரிய தோல்­வி­யைச் சந்­தித்த வேளை­யில் தாம் அக்­கட்­சி­யில் இணைந்­த­தா­கக் குறிப்­பிட்­டுள்ள குஷ்பு, பணம், பெயர், அல்­லது புக­ழுக்­காக தாம் காங்­கி­ர­சில் இணை­ய­வில்லை எனத் தெரி­வித்­துள்­ளார்.

கட்­சி­யின் உயர்­மட்­டத்­தி­லுள்ள, கள­நி­ல­வ­ரங்­க­ளு­டன் தொடர்­பில்­லாத மற்­றும் பொது­மக்­க­ளால் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத சிலர் கட்­சிக்­காக உண்­மை­யாக உழைக்க விரும்­பும் தம்­மைப் போன்­ற­வர்­களை நசுக்க விரும்­பு­வ­தா­க­வும் குஷ்பு தமது கடி­தத்­தில் சாடி­யுள்­ளார்.

நேற்று குஷ்­பு­வு­டன் சேர்ந்து அவ­ரது கண­வர் சுந்­தர் சி.யும் பாஜ­க­வில் இணைந்­தார். தமது அர­சி­யல் பய­ணத்­தின் முதற்­கட்­ட­மாக திமு­க­வில் இணைந்து நான்கு ஆண்­டு­கள் பணி­யாற்­றிய குஷ்பு, ஆறு ஆண்­டு­க­ளுக்கு முன்பு திமு­க­வில் இருந்து விலகி காங்­கி­ர­சில் இணைந்­தார். அவ­ரது வில­க­லால் காங்­கி­ர­சுக்கு எந்­த­வித இழப்­பும் இல்லை என தமி­ழக காங்­கி­ரஸ் தலை­வர் அழ­கிரி கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!