தாயாரின் உடலுக்கு தமிழக முதல்வர் கண்ணீர் அஞ்சலி

1 mins read
1af9c5e8-1d87-445c-94bc-b2808163a47c
தமிழக முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள், 93, உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். படம்: தமிழக ஊடகம் -

தமிழக முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள், 93, உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது உடலுக்கு முதல்வர் பழனிசாமி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். முதல்வரின் தாயார் உடலுக்கு துணைமுதல்வர், அமைச்சர்கள், உறவினர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த தவுசாயம்மாளுக்கு முதல்வர் பழனிசாமியுடன் கோவிந்தராஜ் என்கிற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை பழனிசாமியின் சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் தவுசாயம்மாள் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்