மிட்டாய் கொடுத்து ஆறு மாதமாக இரு சிறுமிகள் சீரழிப்பு 75 வயது முதியவர் உட்பட எழுவர் கைது

மிட்டாய் கொடுத்து ஆறு மாதமாக இரு சிறுமிகள் சீரழிப்பு 75 வயது முதியவர் உட்பட எழுவர் கைது

2 mins read
b434145d-204e-4879-8443-c6d01b0a1803
குழந்தைகள் பாலி யல் கொடுமை தொடர்பில் முதியவர் முத்துசாமி, சிவா, சண்முகம், மணிகண்டன், சூர்யா, செந்தமிழ் செல்வன், வரதராஜன் ஆகிய ஏழு பேர் கைதாகி உள்ளனர்.படம்: ஊடகம் -

நாமக்­கல்: ராசி­பு­ரத்­தில் இரு பெண் குழந்­தை­க­ளின் வறுமை நிலை­யைத் தங்­க­ளுக்கு சாதக மாக்­கிக்­கொண்டு, மிட்­டாய் கொடுத்து அவர்­களை கடந்த ஆறு மாத கால­மாக ஏழு பேர் பாலி­யல் வன்ெகா­டுமை செய்து வந்­துள்­ள­னர்.

இந்தச் சம்­ப­வம் தொடர்­பில் ஒரு முதி­ய­வர் உட்­பட ஏழு பேர் போக்சோ சட்­டத்­தின்கீழ் கைதாகி உள்­ள­னர்.

நாமக்­கல் மாவட்­டம், ராசி­பு­ரத்­தில் தனது தாயு­டன் வசித்து வரும் 12 மற்­றும் 13 வய­தான இரு சிறுமி களும் பாலி­யல் கொடு­மைக்கு ஆளாகி வரும் தக­வல் மாவட்ட குழந்­தை­கள் பாது­காப்பு அலு­வ­லர் ரஞ்­சி­த­பி­ரியா கவ­னத்­துக்­குச் சென்றுள்­ளது.

இதை­ய­டுத்து, கடந்த ஆறு மாத­மாக பாலி­யல் தொல்லை கொடுத்து வந்த செந்­த­மிழ்­செல்­வம், 31, மணி­கண்­டன், 30, முத்து­சாமி, 75, சிவா, 26, சூர்யா,23, சண்­மு­கம், 45, வர­த­ரா­ஜன், 30, ஆகிய ஏழு பேரும் கைதா­கி­னர்.

இன்னும் சிலரையும் போலிசார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரும் நாமக்கல் குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே திண்டுக்கல்லில் 12 வயதான சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர் நிரபராதி என்று விடு விக்கப்பட்டதை அடுத்து காவல் துறை மீதும் அரசு மீதும் விமர் சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், இரு சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ள இச்சம்பவத்தில் 75 வயது முதியவர் கைதாகியிருப்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

கணவர் இல்லாத சிறுமிகளின் தாயார், ஏழ்மை காரணமாக அரு கிலுள்ள தனியார் ஜவ்வரிசி ஆலை யில் கூலி வேலைக்குச் சென்று வருகிறார். இரவு நேரத்திலும் வேலைக்குச் சென்றுவிடுவார். இத னால், தனியாக வீட்டில் இருந்துள்ள அக்கா, தங்கைக்கு தின்பண்டங்கள் வாங்கிக்கொடுத்து இந்தக் குற்றச் செயல் நடந்துள்ளது.