பாலியல் குற்றங்கள்: பாதிக்கப்படும் சிறுமிகளுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு

1 mins read

நாட்­டில் சிறு­மிகளுக்கு எதி­ரான பாலி­யல் குற்­றங்­கள் அதி­க­ரித்து வரும் வேளை­யில், பாலி­யல் குற்­றங்­க­ளால் பாதிக்­கப்­படும் குழந்­தை­க­ளுக்கு 10 லட்ச ரூபாய் வரை இழப்­பீடு வழங்­கப்­படும் என தமி­ழக அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

பாலி­யல் குற்­றங்­க­ளால் பாதிக்­கப்­படும் குழந்­தை­க­ளின் மறு­வாழ்­வுக்­காக நிதி வழங்­கும் புதிய திட்­டத்தை தொடங்க தமி­ழக அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

இது தொடர்­பாக, சமூக நலத்­துறை செய­லா­ளர் மது­மதி அர­சாணை வெளி­யிட்­டுள்­ளார்.

அதில், இத்­திட்­டத்­தின் கீழ் 14,96,00,000 ரூபா­யு­டன், சமூக நலத்­துறை சார்­பில் சேமிப்புக் கணக்கு தொடங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த வங்­கிக் கணக்­கில் முதற்­கட்­ட­மாக பாலி­யல் வன்­மு­றை­யால் பாதிக்­கப்­படும் குழந்­தை­க­ளுக்கு இழப்­பீடு வழங்­கும் திட்­டத்­திற்கு 2 கோடி ரூபாய் நிதியை தமி­ழக அரசு ஒதுக்­கி­யுள்­ளது.

பாலி­யல் வன்­மு­றை­க­ளுக்கு உள்­ளா­கும் குழந்­தை­க­ளுக்கு குறைந்­த­பட்­சம் 50 ஆயி­ரம் ரூபாய் முதல் அதி­க­பட்­சம் 10 லட்­சம் ரூபாய் வரை இழப்­பீடு வழங்­கப்­படும் என­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.