சுற்றுச்சூழல் பொறியாளர் சிக்கினார்; கோடிக்கணக்கில் பணம், கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல்

வேலூர்: மாசுக் கட்­டுப்­பாட்டு வாரிய இணை தலை­மைப் பொறி­யா­ளர் ஒரு­வ­ரின் வீட்டிலும் அலு­வ­ல­கத்திலும் லஞ்ச ஒழிப்­புத் துறை போலி­சார் நடத்­திய அதி­ரடி சோத­னை­யில் கட்டுக்கட்டாக கோடிக் கணக்­கில் பணமும் கிலோ கணக்­கில் தங்­க நகைகளும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

கடந்த 24 மணி நேர­மாக நடந்த ெதாடர் சோத­னை­யில் ரூ.3.60 கோடி ரொக்­கம், நான்கு கிலோ தங்க நகை­கள், 11 கிலோ வெள்­ளிப் பொருட்­கள், ரூ.100 கோடி மதிப்­பி­லான 40க்கும் மேற்­பட்ட சொத்­துப் பத்­தி­ரங்­கள், கார் ஆகிய வற்றை லஞ்ச ஒழிப்­புப் பிரிவு போலிசார் கைப்பற்றினர்.

வேலூர், காந்தி நக­ரில் உள்ள தமிழ்­நாடு மாசுக் கட்­டுப்­பாடு வாரி­யத்­தில் பன்­னீர்­செல்­வம், 51, பணி­பு­ரிந்து வந்தார்.

இவ­ரது கட்­டுப்­பாட்­டில்தான் திரு­வண்­ணா­மலை, தர்­ம­புரி, ஓசூர், விழுப்­பு­ரம், வாணி­யம்­பாடி ஆகிய ஆறு மாவட்­டங்­களும் உள்­ளன.

இத­னால், அந்தப் பகுதிகளில் அமை­யும் தொழிற்­சா­லை­க­ளுக்கு அனு­மதி வழங்­கு­வது உள்­ளிட்ட அனைத்து அதி­கா­ரங்­களும் இவரது கையில்தான் இருந்து வந்­துள்ளது. இதைப் பயன்­ப­டுத்தி பன்­னீர்­செல்­வம் லஞ்­சம் வாங்கி வந்­த­தாகக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், பன்­னீர்­செல்­வம் முறை­கேட்­டில் ஈடு­ப­டு­வ­தாக லஞ்ச ஒழிப்­புப் போலி­சா­ருக்குத் தக­வல் கிடைத்­ததைத் தொடர்ந்து, காந்தி­ ந­க­ரில் அமைந்­துள்ள இவரது வாடகை வீட்­டில் லஞ்ச ஒழிப்புப் போலி­சார் சோதனை நடத்­தி­னர்.

அப்போது, இந்த வீடு, காரில் இருந்து ரூ.34 லட்­சம் கணக்­கில் காட்டப்படாத ரொக்கம் சிக்கியது.

இைதத்ெதாடர்ந்து, ராணிப்­பேட்டை மாவட்­டம், ராணி­பெல் நக­ரில் உள்ள பன்­னீா்செல்­வத்­தின் வீட்­டிலும் லஞ்ச ஒழிப்புப் போலிசார் சோத­னை நடத்தினர்.

அப்போது, ரூ. 3.60 கோடி ரொக்­கம், 4 கிலோ தங்­கம், 11 கிலோ வெள்­ளிப் பொருட்­கள், 40க்கும் மேற்­பட்ட சொத்­துப் பத்­தி­ரங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­ன.

கணக்­கில் வராத பணம், தங்­கம், வெள்­ளிப் பொருட்­கள் பறி­முதல் செய்­யப்­பட்­டது குறித்து பன்­னீா்செல்­வம் மீது விசா­ர­ணை நடத்தப்பட உள்ளதாக லஞ்ச ஒழிப்­புப் பிரிவு போலிசார் தெரி­வித்­தனா்.

இதனால், இத்துறையில் பணி யாற்றும் இதர அதி­கா­ரி­கள் கலக்­க­ம­டைந்­துள்­ளனா்.

வேலூ­ரில் உள்ள வீட்­டில் சோதனை குறித்த தக­வல் கிடைத்­த­தும், பன்­னீர்­செல்­வத்­தின் குடும்­பத்­தி­னர் வீட்­டில் இருந்த பணம், நகை­களை மூட்­டை­களில் கட்டி பழைய பொருட்­களை வைக்­கும் அறை­யில் மறைத்­துள்­ள­னர்.

ஆனால், போலிசார் மறைத்து வைத்த மூட்­டை­களை மொத்­த­மாக பறி­மு­தல் செய்­த­தைப் பார்த்து அவ­ரது குடும்­பத்­தி­னர் அதிர்ந்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!