குஷ்பு: தவறாகப் பேசியதற்கு மன்னிப்பு கோருகிறேன்

குஷ்பு: தவறாகப் பேசியதற்கு மன்னிப்பு கோருகிறேன்

2 mins read
894eb050-1356-48d7-b652-e129483c657c
-

அண்­மை­யில் காங்­கி­ரஸ் ஒரு மூளை வளர்ச்சி இல்­லாத, சிந்­திக்­கும் திற­னற்ற கட்சி என்று கடு­மை­யாக விமர்­ச­னம் செய்­தி­ருந்த நடிகை குஷ்பு, இப் ேபாது தனது விமர்­ச­னத்­திற்காக மன்­னிப்­புக் கேட்­டுள்­ளார்.

காங்­கி­ரஸ் தேசிய செய்­தித் தொடர்­பா­ள­ராக இருந்த குஷ்பு அண்­மை­யில் பாஜ­க­வில் இணைந்­தார். இதைத்தொடர்ந்து பேட்டி அளித்தவர் காங்கிரஸ் கட்சியை சாடும் வகையில் பேசியிருந்தார்.

குஷ்புவின் கருத்துகள் மன­வளர்ச்சி குன்றியோரை அவ­மா­னப்­ப­டுத்­தும் விதத்­தில் உள்­ள­தாகக் கூறி மாற்­றுத்­தி­ற­னா­ளி கள் கூட்டமைப்பு கடும் கண்­ட­னம் தெரி­வித்­தது.

இதை­த்தொடர்ந்து, குஷ்பு மீது மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் சங்­கத்­தி­னர் போலி­சில் புகார் அளித்­தனர். அத்­து­டன், குஷ்பு மீது தமி­ழ­கத்­தின் பல காவல் நிலை­யங்­க­ளி­லும் புகார் கொடுக்­கப்­பட்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில், தான் வேண்­டு­மென்றே அப்­படி பேச­வில்லை என்று விளக்கம் அளித்துள்ள குஷ்பு, தான் பேசிய வார்த்­தைக்­காக வருத்­தம் தெரி­வித்­துள்­ளார்.

"காங்­கி­ரசை மன­ந­லம் பாதிக்­கப்­பட்ட கட்சி," என்று விமர்­சித்­த­மைக்­காக மன்­னிப்­பும் கேட்­டுக் கொண்டுள்ளார்.

தனது திரைப்­பட வாய்ப்­பு­கள் வீழ்ந்­த­வு­டன், ஆட்­சி­யி­லி­ருந்த திமு­க­வில் இணைந்­த­வர், அதன்­பின்­னர் காங்­கி­ரஸ் கட்­சிக்கு மாறி, காங்­கி­ரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்­பா­ள­ராக இருந்து வந்­த­வர், திடீ­ரென அக்­கட்­சி­யில் இ­ருந்து விலகி பாஜகவில் இணைந்­துள்­ளார்.

காங்­கி­ர­சில் இருந்த காலத்­தில், பார­திய ஜன­தாவை கடு­மை­யாக விமர்­சித்து வந்தவர், தற்­போது திடீ­ரென காங்­கி­ரஸ் கட்­சி­யி­லி­ருந்து விலகி பார­திய ஜன­தா­வில் ஐக்­கி­ய­மா­கி­யுள்­ளார்.

அவசரப் புத்தியிலும் ஆழ்ந்த மனக் கவலையிலும் வேதனையான ஒரு தருணத்திலும் சில வார்த்தைகளை நான் தவறாகப் பயன்படுத்தியதற்காக மிகவும் வருந்துகிறேன், மன்னிப்பு கேட்கிறேன்.

பாஜகவில் இணைந்துள்ள நடிகை குஷ்பு.