இந்திய ஊழியர் அபுதாபியில் மரணம்; 11 நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு கொண்டுவரப்பட்ட உடல்

இந்திய ஊழியர் அபுதாபியில் மரணம்; 11 நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு கொண்டுவரப்பட்ட உடல்

1 mins read
25925cab-d0c2-4297-9204-163e33c53ddf
அபுதாபியில் உயிரிழந்த இந்திய ஊழியர் விஜயகுமாரின் குடும்பத்தார். படம்: தமிழக ஊடகம் -

தமிழகத்தின் பெரம்பலூர் அருகே கல்பாடி எறையூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார், அபுதாபியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

இம்மாதம் நான்காம் தேதி உடல்நலக் குறைவால் விஜயகுமார் அபுதாபியில் மரணமடைந்தார். தகவலறிந்த விஜயகுமாரின் மனைவி மற்றும் உறவினர்கள், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர உதவிநாடி, பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, துபாயில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்ட பாரிவேந்தர், விஜயகுமாரின் உடலை இந்தியா கொண்டுவர முயற்சி மேற்கொண்டார்.

திரு விஜயகுமாரின் உடல் தனி விமானம் மூலம் 11 நாள்களுக்கு பிறகு சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் அங்கிருந்து சொந்த ஊரான கல்பாடி எறையூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

உடலை தாயகம் கொண்டுவர உதவியதற்காக திரு விஜயகுமாரின் குடும்பத்தார் திரு பாரிவேந்தருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்