குளிர்பதனப் பெட்டிக்குள்ளிருந்து மீட்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு

குளிர்பதனப் பெட்டிக்குள்ளிருந்து மீட்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு

1 mins read
90eb4712-9586-455f-b25e-0e7c8a5d53b1
படம்: தமிழக ஊடகம் -

சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணிய குமார், 74. இவருடைய தம்பி சரவணன், 70.

இவர்களின் தங்கை மகள்கள் ஜெயபிரியா, கீதா உட்பட இவர்கள் நால்வரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பாலசுப்பிரமணிய குமாருக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது.

தனியார் மருத்துவமனையில் பாலசுப்பிரமணிய குமார் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறி, இறுதிச் சடங்குக்காக உடலை வைக்கும் குளிர்பதன பெட்டிக்குள் அவரது உடலை அவரது தம்பி சரவணன் வைத்தார்.

தகவலறிந்து வந்து பாலசுப்ரமணிய குமாரை மீட்ட போலிசார் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்தனர்.

ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சரவணன் மீது வழக்குப் பதிவு செய்து போலிசார் விசாரித்து வருகின்றனர். அவர் மனநலம் சரியில்லாதவர் என்றும் கூறப்படுகிறது.