தமிழகத்தில் ஆம்னி பேருந்து சேவை தொடக்கம்

கிரு­மிப் பர­வல் கார­ண­மாக ஆறு மாதங்­க­ளாக நிறுத்தி வைக்­கப்­பட்டு இருந்து ஆம்னி பேருந்­து­கள் நேற்று முதல் ஓடத் தொடங்­கின. கொரோனா பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­யாக கடந்த மார்ச் மாதம் பொது போக்­கு­வ­ரத்து முடக்­கப்­பட்­ட­தால் அரசு, தனி­யார் பேருந்­து­க­ளின் சேவை அடி­யோடு நிறுத்­தப்­பட்­டது.

பர­வல் வேகம் சற்று தணிந்­த­தைத் தொடர்ந்து கடந்த செப்­டம்­பர் 7ஆம் தேதி முதல் வெளி மாவட்­டங்­க­ளுக்கு பொதுப் போக்­கு­வ­ரத்து அனு­ம­திக்­கப்­பட்­டது. இதன்­மூ­லம் அரசு விரைவுப் பேருந்­து­களும் சேவை­யைத் தொடங்­கின. தற்­போது கிரு­மித்­தொற்று பெரிய அச்­சு­றுத்­த­லாக இல்லை என்­ப­தால் ஆம்னி பேருந்­து­களும் இயங்க தமி­ழக அரசு அனு­மதி அளித்­துள்­ளது.

இருப்­பி­னும் ஆம்னி பேருந்­து­களில் 50 விழுக்­காட்டு பய­ணி­களை மட்­டுமே ஏற்­றிச் செல்ல வேண்­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அத­னைத் தொடர்ந்து ஆம்னி பேருந்­து­களில் தூய்­மைப்­பணி மும்­மு­ர­மாக நடந்­தது. சென்னை கோயம்­பேடு வளா­கத்­தில் உள்ள பேருந்­து­களில் கிரு­மி­நா­சினி தெளிப்பு, சுத்­தம் செய்­தல் உள்­ளிட்ட பரா­ம­ரிப்­புப் பணி­கள் தீவி­ர­மாக நடந்­தன. பேருந்­து­க­ளின் சன்­னல் திரை, இருக்­கைத் துணி­கள் அகற்­றப்­பட்­டன.

ஆம்னி பேருந்­து­கள் இயக்­கப்­ப­டு­வது குறித்த தக­வ­லால் பய­ணி­கள் இணை­யம் மூலம் வேக­மாக பய­ணச்­சீட்டை முன்­ப­திவு செய்­யத் தொடங்­கி­னர். பலர் நேர­டி­யாக வந்­தும் ஆம்னி பேருந்­து­களில் பய­ணச்­சீட்டு வாங்கிச் செல்­வதை பார்க்க முடிந்­தது.

ஆம்னி பேருந்­து­கள் நேற்று அதி­காலை 3 மணி முதலே இயங்­கத் தொடங்­கின.

கொரோனா கார­ண­மாக 6 மாதங்­க­ளாக ஓடா­மல் இருந்த ஆம்னி பேருந்­து­கள் புறப்­ப­டத் தொடங்­கி­ய­தால் பேருந்து உரி­மை­யா­ளர்­கள், தொழி­லா­ளர்­கள், பய­ணி­கள் உள்­ளிட்ட அனை­வ­ரும் மகிழ்ச்சி அடைந்­த­னர். கற்­பூ­ரம் ஏற்­றி­யும் தேங்­காய் உடைத்­தும் ஆம்னி பேருந்­து­களை ஓட்­டு­நர்­கள் ஓட்­டத் தொடங்­கி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!