காணிக்கை செலுத்திவிட்டு திருடிய இளையர்

1 mins read
675f268b-f348-44b9-8e1b-3138da233213
படம்: ஊடகம் -

திருவான்மியூரில் மருந்தீசுவரர் கோயில் இருக்கிறது.

கோயிலை நேற்று அதிகாலை திறந்த அர்ச்ச கர்கள் உண்டியல்கள் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உண்டியலிலிருந்த பணம் கொள்ளை போயிருந்தது.

திருவான்மியூர் காவல் நிலைய போலிசார் வந்து விசாரணை நடத்தி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

முகக்கவசம் அணிந்த இளைஞர் ஒருவர் கோயில் உண்டியல் அருகே சென்று சட்டைப் பையிலிருந்து காணிக்கையை எடுத்து உண்டியலுக்குள் போடுகிறார்.

அதன் பிறகு கம்பியால் உண்டியலின் பூட்டை உடைக்கிறார். உண்டி யலுக்குள் இருந்த ரூபாய் நோட்டுகளை மட்டும் எடுக்கி றார்.

அதனால், உண்டிய லுக்குள் சில்லறைக்காசுகள் அப்படியே இருந்தன.

இதை யடுத்து பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுச் செல்கிறார்.

இந்தப் பதிவுகள் அடிப்படையில் போலிசார் அவரைத் தேடிவருகின்றனர்.