100 வயது, 92 வயது தம்பதியிடம் தோற்று ஓடிய கொவிட்-19

100 வயது, 92 வயது தம்பதியிடம் தோற்று ஓடிய கொவிட்-19

1 mins read
b06d7bd7-98b4-405f-933d-c672c77a7029
திரு வைத்தியநாதன், 100, அவரின் 92 வயது மனைவி திருமதி ஜான­கி­ வைத்தியநாதன் இருவரும் மன உறுதியுடன் போராடி கொவிட்-19 கிருமியை விரட்டி வெற்றிபெற்றனர். படங்கள்: தமிழக ஊடகம் -
multi-img1 of 2

சென்னை: மன உறுதி இருந்­தால் கொவிட்-19 தொற்­றைக்கூட தோற்க­டித்­து­வி­ட­லாம் என்­பதை தமி­ழ­கத்­தைச் சேர்ந்த முதிய தம்பதி­யர் மெய்­ப்பித்துள்ளனர்.

சென்னை தி நக­ரில் வசிக்­கும் வைத்­தி­ய­நா­தன் என்ற 100 வயது முதி­ய­வ­ரும் அவ­ரின் மனை­வி­யான 92 வயது ஜான­கி­யும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்­து­வ­மனை­யில் இரண்டு மாதங்­க­ளுக்கு முன் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

"காய்ச்சல், இரு­மல், மூச்­சுத் திண­றல் பாதிப்பு எல்­லாம் சேர்ந்து­கொண்டு இவர்­க­ளைப் பாடாய்­ப்படுத்­தின.

"ஆனா­லும் அசைக்க முடி­யாத மன­ உ­று­தி­யு­டன் இத்­தம்­ப­தி­யர் மருத்­து­வர்­க­ளுக்­குக் கட்­டுப்­பட்டு ஒத்­து­ழைத்­த­னர். அதன் பல­னாக கடை­சி­யில் இவர்­க­ளுக்கு வெற்றி கிட்­டி­யது. இந்­தத் தம்­ப­தி­யி­டம் கொவிட்-19 கிரு­மி­ ஜம்பம் பலிக்க வில்லை. அது தோற்­று­விட்­டது.

"இவர்­க­ளை­விட்டு ஓடிப்­போய்­விட்­டது. இந்த இரு­வ­ரும் கடந்த திங்­கட்­கி­ழமை வீடு திரும்­பி­னர்," என்று மருத்­து­வ­ம­னை­யின் துறைத் தலை­வர் டாக்­டர் ஈ தர­ணி­ரா­ஜன் தெரி­வித்­தார்.

திரு வைத்­தி­ய­நா­தன், மருத்­து­வர்­கள் உடன் இருக்க இம்­மா­தம் 4 ஆம் தேதி தனது 100வது பிறந்­த­நாளை மருத்­து­வ­ம­னை­யிலேயே கொண்­டா­டி­ய­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.