துப்பாக்கி உருளைகள் இதயத்தை துளைக்காமல் காத்த கைபேசி

துப்பாக்கி உருளைகள் இதயத்தை துளைக்காமல் காத்த கைபேசி

1 mins read
7e16fefe-4fab-4048-adb5-2cd56921d8ae
துப்பாக்கியில் இருந்து பாய்ந்த உருளைகள் விவசாயி வேலாயுதம் சட்டைப் பையில் வைத்திருந்த கைபேசியின் பின்புறத்தில் பாய்ந்து அதிலேயே தங்கிவிட்டன. படம்: தமிழக ஊடகம் -

வாணி­யம்­பாடி: திருப்­பத்­தூர் மாவட்­டம் வாணி­யம்­பாடி அடுத்த தமிழக-ஆந்­திர எல்­லை­யில் உள்ள நாரா­ய­ண­பு­ரம் கிரா­மத்­தைச் சேர்ந்த வேலா­யு­தம், 55, என்ற விவ­சாயி தன்­னு­டைய கைபேசி கார­ண­மாக உயிர்­தப்பி இருக்­கி­றார் என்­பது இப்­போது தெரி­ய­வந்­துள்­ளது.

மர்­ம­ந­பர்­கள் சுட்­ட­தில் துப்­பாக்­கி­யில் இருந்து பாய்ந்த உரு­ளை­கள் (balls) அந்த விவ­சா­யி­யின் காலில் ஊமைக்­கா­யத்தை ஏற்­ப­டுத்­தின. அவ­ரின் கைபே­சி­யில் திடீ­ரென சத்­தம் கிளம்­பி­யது, ஆனால் அவற்றை எல்லாம் விவ­சாயி பெரி­தா­கக் கரு­த­வில்லை.

அடுத்த நாளன்று வலி தாங்க முடி­யா­மல் போன­தால் அவர் மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றார். அங்கு அவ­ரு­டைய கால் பகு­தி­யில் துப்­பாக்கி உரு­ளை­யால் பாதிப்பு ஏற்­பட்டு இருந்­தது தெரி­ய­வந்­தது.

அவ­ரின் கைபே­சி­யைப் பரி­சோ­தித்­த­போது அதன் பின்­பு­றத்­தில் இரண்டு உரு­ளை­கள் பாய்ந்து இருந்­தது தெரி­ய­வந்­தது. அந்­தக் கைபேசி இல்லை என்­றால் அந்த உரு­ளை­கள் அவ­ரின் மார்­புப் பகு­தி­யைத் தாக்கி மர­ணம் ஏற்­ப­டுத்தி இருக்­க­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

இம்­மா­தம் 15ஆம் தேதி நிகழ்ந்த இந்­தச் சம்­ப­வத்­தில் ஈடு­பட்ட குற்­ற­வாளி யார் என்­பதை கண்­டு­பி­டிக்க போலி­ஸ் வேட்­டை­ தொடங்கியது.