'ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் இருந்து யாரும் தப்பமுடியாது'

'ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் இருந்து யாரும் தப்பமுடியாது'

1 mins read
da0d51f8-962c-410e-911f-81b13892533c
படம்: ஊடகம் -

சென்னை: ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் இருந்து யாரும் தப்பமுடியாது என்று எச்சரித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

"ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு 37 மாதங்கள் உருண்டோடிவிட்ட போதும் விசாரணை இன்னும் முடியவில்லை," என்று குற்றஞ் சாட்டி உள்ளவர், "திமுக ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரண சதி குறித்து விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்," என்று தனது அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.