வடிவேலு: மீண்டும் அரசியல் என்பதெல்லாம் கட்டுக்கதை

வடிவேலு: மீண்டும் அரசியல் என்பதெல்லாம் கட்டுக்கதை

1 mins read
e8403cec-4b6a-465c-a461-96140dac0ba7
படம்: ஊடகம் -

சிரிப்பு என்றாலே வடிவேலுவின் நகைக்சுவைக் காட்சிகள்தான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமான வடிவேலுக்கு திரைப்படங்களில் நடிக்க தற்போது வாய்ப்புகள் இல்லை.

இந்நிலையில், அவர் பாஜகவில் இணைய இருப்பதாகவும் மீண்டும் அரசியலில் ஈடுபடப்போவதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் உண்மையில்லை என்கிறது வடிவேலுவின் தரப்பு.

தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்கள் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அக்கட்சியைப் பலப்படுத்தும் வகையில் தங்களது பிரசாரப் பீரங்கிகளைத் தயார்ப்படுத்தி வருகின்றனர்.

இதையடுத்து, வடிவேலுவிடம் பாஜக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து வடிவேலு, "மீண்டும் அரசியலா, மீண்டும் ஒரு புதுக் கட்சியா? அதெல்லாம் இல்லை. அவை அனைத்தும் புரளி," என்கிறார்.

அண்மைக்காலமாக இசையமைப்பாளர் கங்கை அமரன், கஸ்தூரி, ராதாரவி, கௌதமி, நமீதா, விஜயக்குமார், காயத்ரி ரகுராம், எஸ்.வி.சேகர், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், குஷ்பு என ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் தேசிய கட்சியான பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்