‘தன்னையே பாதுகாக்க தெரியாத டிரம்ப், மக்களைக் காப்பது சந்தேகம்’

ஃபிலடெல்ஃபியா: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா (படம்), எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனை ஆதரித்து நேற்று பிரசார மேடையில் ஏறினார்.

அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்கள்கூட இல்லாத நிலையில், அதிக போட்டி எதிர்பார்க்கப்படும் பென்சில்வேனியா மாநிலத்தில் தமது முன்னாள் துணை அதிபர் பைடனுக்காக வாக்குகளைச் சேகரிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.
பென்சில்வேனியாவின் ஃபிலடெல்ஃபியா நகரில் பிரசாரம் செய்த திரு ஒபாமா, அதிபர் டோனல்ட் டிரம்ப்பை கடுமையாக சாடினார்.

“தம்மைத் தவிர வேறு எவருக்கும் உதவி செய்வதிலோ பணியை மேற்கொள்வதிலோ டிரம்ப் ஆர்வம் காட்டவில்லை,” என்று அவர் குறைகூறினார்.

2009 முதல் 2016ஆம் ஆண்டு வரை இரு தவணைக் காலம் அதிபராக இருந்த திரு ஒபாமா, ஜனநாயகக் கட்சியில் தொடர்ந்து பிரபலமாக இருக்கிறார். கொரோனா கிருமித்தொற்றுச் சூழலை திரு டிரம்ப் கையாளும் விதத்தைச் சாடிய திரு ஒபாமா, அதிபரே கிருமித்தொற்றுக்கு ஆளானதைச் சுட்டினார்.

“தன்னையே பாதுகாத்துக் கொள்ளத் தெரியாத டிரம்ப் எப்படி அமெரிக்க மக்களைக் காப்பாற்றுவார்?

“இது ஒன்றும் ரியாலிட்டி ஷோ அல்ல. இது மக்களின் வாழ்க்கைப் பிரச்சினை. திறமையில்லாத அதிபரின் ஆட்சியால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் விமர்சித்தார்.

நாடு முழுவதும் நியூயார்க் டைம்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், ஒன்பது புள்ளி வித்தியாசத்தில் திரு பைடன் தற்போது முன்னணி வகிப்பதாகத் தெரியவந்து உள்ளது.
பென்சில்வேனியா மாநிலத்தில் மட்டும் நான்கு புள்ளிக்கும் சற்று குறைவான வித்தியாசத்தில் அவர் முன்னிலை வகிக்கிறார்.

ஆனால் கருத்துக்கணிப்புகளை நம்பி வாக்காளர்கள் மெத்தனமாக இருந்துவிட வேண்டாம் என்று எச்சரித்த திரு ஒபாமா, 2016ல் நடைபெற்ற தேர்தலில் திரு டிரம்ப்பின் எதிர்பாரா வெற்றிக்கு முன்னதாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் பிழை ஏற்பட்டிருந்ததை நினைவுபடுத்தினார்.

“கருத்துக்கணிப்புகளைப் பற்றி நான் பொருட்படுத்துவதே கிடையாது. கடந்த தேர்தலிலும் ஏராளமான கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன. அதன்படி ஹில்லரி கிளிண்டன்தான் வெற்றி பெறுவார் என்று நினைத்த அமெரிக்கர்கள் பலரும் வாக்களிக்காமல் மெத்தனமாக இருந்துவிட்டனர். ஆனால், 2016 தேர்தலில் நிலவரம் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. ஆனால் இம்முறை அதேபோன்ற தவறு ஏற்பட்டுவிடக்கூடாது,” என்று திரு ஒபாமா எச்சரித்தார்.

திறந்தவெளி கார் நிறுத்தும் இடத்தில் தங்களது வாகனங்களில் இருந்தவாறு திரு பைடனின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் திரு ஒபாமா பிரசாரம் செய்வதைக் கண்டனர். கார் நிறுத்துமிடம் முழுவதும் நிரம்பும் அளவிற்கு கிட்டத்தட்ட 280 வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

திரு டிரம்ப், திரு பைடன் பங்கேற்கும் இரண்டாவது மற்றும் இறுதி நேரடி விவாதம், சிங்கப்பூர் நேரப்படி இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!