சுடச் சுடச் செய்திகள்

வெங்காய விலை கூடியதால் ‘ஆம்லெட்’ இல்லை என கைவிரிப்பு

மதுரை: மது­ரை­யில் உள்ள சில உண­வ­கங்­களில் ‘ஆம்­லெட்’ போடு­வது நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. வெங்­கா­யம் அதிக விலைக்கு விற்­கப்­ப­டு­வ­தால் சில ஹோட்­டல்­களில் ‘ஆம்­லெட்’ கிடை­யாது என்ற அறிவிப்புகளும் வைக்கப்பட்டு உள்ளன.

பொது­வாக புரோட்டா கடை­களில் ஒரு ‘ஆம்­லெட்’ ரூ.15க்கு விற்­கப்­ப­டு­வது வழக்­கம். தற்போது ரூ.20 வரை ஆம்­லெட் விற்­கப்­ப­டு­கிறது. இத­னால் ‘ஆம்­லெட்’ பிரி­யர்­கள் கவலை அடைந்­துள்­ள­னர்.

மது­ரை­யைச் சேர்ந்த ‘ஆம்­லெட்’ ரசி­கர் ஒரு­வர், “ஆம்­லெட்­டுக்கு வெங்­கா­யம் தேவை. எனவே வெங்­கா­யத்­தின் விலை­யேற்­றத்தைப் பொறுத்து ‘ஆம்­லெட்’ விலையை உயர்த்தலாம். ஆனால் வெங்­கா­யம் இல்­லா­மல் வெறும் முட்­டை­யில் செய்­யப்­படும் ‘ஆஃப்பா­யில்’ விலை­யை­யும் ஏற்­றி­விட்­ட­னர். இது பற்றி கேட்­டால் முட்டை உண­வு­க­ளுக்கு எல்லாம் ஒரே விலை என்று கடைக்­கா­ரர்­கள் கூறு­கின்றனர்,” என்று நொந்­து­கொண்­டார்.

மதுரை புரோட்டா கடை­களில் ஆம்­லெட், வெங்­காய தோசை, வெங்­காய ஊத்­தப்­பம் போன்­ற­வற்றை வாடிக்­கை­யா­ளர்­கள் அதி­கம் விரும்பி சாப்­பி­டு­கின்­ற­னர். ஆனால் தற்போதைய சூழலில் வெங்காயம் இல்லாத சாதா தோசை, இட்லி, பொங்கல் போன்ற உணவு வகைகளுக்கு வாடிக்கையாளர்கள் மாறி வருகின்றனர்.

கடந்த சில மாதங்­க­ளாக பெரிய வெங்­கா­யம் கிலோ ரூ.50க்கும் குறை­வாக விற்கப்பட்டது.தெலுங்­கானா, மகாராஷ்டிரா, ஆந்­திரா, கர்­நா­டகா ஆகிய மாநி­லங்­களில் பெரிய வெங்­கா­யம் அதிக அள­வில் விளை­கிறது.

அண்மையில் இந்த மாநி­லங்­களில் கடும் மழை பெய்­தது. இதன் கார­ண­மாக பெரிய வெங்­கா­யத்­தின் விளைச்­சல் கடும் சரிவை சந்­தித்து உள்­ளது. வெங்காய வரத்து குறை­வின் கார­ண­மாக சந்­தை­களில் பெரிய வெங்­கா­யத்­தின் விலை கிடு­கி­டு­வென உயர்ந்­துள்­ளது. நாடு முழு­வ­தும் கடந்த ஒரு வாரத்­தில் பெரிய வெங்­கா­யம் விலை கிலோ­வுக்கு ரூ.50க்கு அதி கரித்து ரூ.100 வரை விறகப் படுகிறது.

இதற்கிடையே வெங்­கா­யத்­தின் விலையைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் ஆப்­கா­னிஸ்­தான், எகிப்து உள்­ளிட்ட நாடு­களில் இருந்து பெரிய வெங்­கா­யத்தை மத்­திய அரசு இறக்­கு­மதி செய்து வரு­கிறது. இறக்­கு­மதி செய்­யப்­பட்ட வெங்­கா­யம் கிலோ ரூ.45க்கு விற்­கப்­படும் என்­றும் அரசு அறி­வித்து உள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon