விஜயதசமியில் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க அனுமதி

விஜயதசமியில் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க அனுமதி

1 mins read

சென்னை: விஜ­ய­த­சமி் அன்று குழந்­தை­க­ளைப் பள்­ளி­களில் சேர்க்­க­வும் அப்­படி குழந்­தை­களை பள்­ளி­களில் சேர்க்­கும் நாளன்றே அவர்­க­ளுக்கு இல­வச பாடப்­ புத்தகங்­களை வழங்­க­வும் தமி­ழக தொடக்­கக் கல்­வித்­துறை அறி­வுறுத்தி உள்­ளது.

இந்­தக் கல்­வித்­துறை சார்­பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதி­கா­ரி­க­ளுக்­கும் அனுப்பி யுள்ள சுற்­ற­றிக்­கை­யில், "தமிழ கத்­தில் உள்ள பள்­ளி­களில் விஜய தச­மி­யின்போது பெற்­றோர் தங்­கள் குழந்­தை­களை முதன்மு­த­லாக பள்­ளி­யில் சேர்த்து விடு­வர். இது ஒரு வழக்­க­மான நடை­முறை. எனவே அர­சுப் பள்ளிகளில் நாளை மறு­நாள் 26ஆம் தேதி கொண்­டா­டப்­படும் விஜயதச­மி­யின் போது மாண­வர்­க­ளின் சேர்க்­கையை அதி­கப்­ப­டுத்­த­லாம்.

"ஊர் பொது இடங்­களில் பதா கைகள் வைத்­தும் ­மக்களிடம் மாண­வர்­களை அர­சுப் பள்­ளி­களில் சேர்ப்­பது குறித்து தெரி­யப்­ப­டுத்­தி­யும் அர­சுப் பள்ளிகளில் குழந்­தை­க­ளைச் சேர்க்க நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும்," என்று கூறப்­பட்­டுள்­ளது.