சுடச் சுடச் செய்திகள்

ரூ.5 கோடி தங்க, வைர நகை கொள்ளை வழக்கு; திகில் படம் போல் இருந்த காெணாளிக் காட்சி

சென்னை: தியா­க­ராய நக­ரில் உள்ள நகைக்­கடை ஒன்­றில் இரு தினங்­க­ளுக்கு முன்பு ரூ.5 கோடி மதிப்­பி­லான தங்­கம், வைர நகை­கள் சூறை­யா­டப்­பட்­டன.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில், அங்­கி­ருந்த கண்­கா­ணிப்பு புகைப்­படக் கரு­வி­களில் பதி­வாகி இருந்த காணொ­ளிக் காட்­சி­கள் அனைத்­தும் ஒரு திகில் படத்­தைப் பார்ப்­பது போன்ற உணர்வைத் தருவதாக போலி­சார் கூறி­யுள்­ள­னர்.

“கொள்­ளையில் தொடர்­பு­டைய இரு­வ­ரைப் பற்றி துப்பு கிடைத்­துள்­ளது. விரை­வில் அவர்­கள் கைது செய்யப்­ப­டு­வார்­கள்,” என்­றும் போலி­சார் தெரி­வித்­த­னர்.

சென்னை தியா­க­ரா­ய­ந­கர் சாருல்லா தெரு­வைச் சேர்ந்­த­வர் ராஜேந்­தி­ர­கு­மார், 60. இவர் அதே பகு­தி­யில் உள்ள மூசா தெரு­வில் இருக்­கும் ஒரு வீட்­டின் முதல் மாடியை வாட­கைக்கு எடுத்து, அதில் உத்­தம் ஜூவல்­லர்ஸ் என்ற பெய­ரில் நகை­களை மொத்த வியா­பா­ரம் செய்து வந்­தார்.

இந்­நி­லை­யில், திருட்டு நடந்த இடத்­தி­லும் அதைச் சுற்­றி­யுள்ள இடங்­க­ளி­லும் பொருத்­தப்­பட்­டுள்ள 120 கண்­கா­ணிப்பு புகைப்­ப­டக் கரு­வி­களை மூன்று தனிப்­படை போலி­சார் ஆய்வு செய்­து அதை காெணா ளி­யாகத் தயா­ரித்­துள்­ள­னர்.

45 நிமி­டங்­கள் ஓடும் அந்­தக் காணொளி, ஒரு திகில் படம்­போல் உள்­ளதாகவும் கூறப்படுகிறது.

காெணாளியின் தொடக்­கத்­தில் மூசா தெரு­வுக்கு வரும் இரு கொள்­ளை­யர்­கள் இரவு 10.30 மணி­ய­ள­வில் மோட்­டார் சைக்­கிளை நிறுத்­து­கி­றார்­கள்.

கொள்ளை அடிப்பவர் மட்­டும் மோட்­டார்­ சைக்­கிளை விட்டு இறங் கிய நிலை­யில், மற்­றொ­ரு­வர் திரும்­பிச் சென்று விடு­கி­றார்.

இறங்­கிய ஆட­வர், முகத்தை துணி­யால் மூடி­ய­படி, இரண்டு கைக­ளி­லும் கையுறை அணிந்து நகைக்­கடை உள்ள வீட்­டின் பின்­பக்க மதில் சுவ­ரில் ஏறி, உள்ளே குதிக்­கி­றார்.

சரி­யாக 11.30 மணிக்கு பூட்டை உடைத்து நகைக்­க­டைக்­குள் சென்று ஒரு லாக்­கரை உடைக்­கி­றார். அதற்­குள் இருந்த தங்க-வைர நகை­கள், தங்­கம், வெள்­ளிக்­கட்­டி­களை வாரிவாரி பைக்­குள் போடு­கி­றார். பை நிரம்பி விட, மற்றொரு லாக்­கரை உடைக்­கி­றார். ஆனால், அதை உடைக்க முடி­ய­வில்லை.

சுமக்­க­ மு­டி­யா­மல், நகை­கள் உள்ள பையை தூக்­கிக்­கொண்டு, நள்­ளி­ரவு 1.30 மணிக்கு நகைக்­கடையை விட்டு வெளி­யே­று­கி­றார்.

அதி­காலை 4 மணி­ வரை தெரு ஓர­மாக உட்­கார்ந்­தி­ருக்­கி­றார். அதன் பிறகு அவரை இறக்கி விட்­டுச்சென்ற கொள்ளை ஆசாமி மீண்­டும் வந்து, மோட்­டார் சைக்­கி­ளில் கொள்ளை ஆசா­மியை அழைத்­துச் செல்­கி­றார். இப்­படி நீள்கிறது காணொளிக் காட்சி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon